பிராங்க்ஃபர்ட்டில் ஆடியின் புதிய சூப்பர் எஸ்யூவி கான்செப்ட் வெளியீடு

ஆடியின் பொதுவான டிசைன் தாத்பரியங்களிலிருந்து மாறுபட்ட புதுமையான கான்செப்ட் கார் பிராங்க்ஃபர்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடியின் கீழ் செயல்படும் இட்டல்டிசைன் கிகாரியோ என்ற நிறுவனத்தின் கைவண்ணத்தில் ஆடி பொறியாளர்கள் இணைந்து கான்செப்ட்டை உருவாக்கியுள்ளனர்.

இட்டல்டிசைன் கிகாரியோவின் பார்கர் கான்செப்ட் காரின் மறு உருவாக இந்த கார் டிசைன் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய கான்செப்ட் சூப்பர் எஸ்யூவி ரகத்தில் இருக்கிறது. இந்த புதிய கான்செப்ட் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

லம்போ டிசைன்

லம்போ டிசைன்

படத்தை பார்த்தவுடன் லம்போர்கினி உரஸ் எஸ்யூவியை நினைவூட்டுகிறதல்லவா? ஆம், இந்த புதிய எஸ்யூவி லம்போர்கினி கல்லார்டோ அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், லம்போர்கினி குறித்து எந்த இடத்திலும் ஆடி வாய் திறக்கவில்லை. இந்த புதிய எஸ்யூவிக்கு ஆடி நானுக் குவாட்ரோ கான்செப்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

 ஆடி அம்சங்கள்

ஆடி அம்சங்கள்

முன்பக்கத்தில் ஆடி கார்களுக்குரிய பெரிய ஏர்இன்டேக், ஆர்8 காரில் இருப்பதுபோன்ற பக்கவாட்டு ஏர் இன்டேக் பிளேடுகள் ஆகியவை ஆடியின் காராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது ஆடி நானுக் குவாட்ரோ கான்செப்ட்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

சூப்பர் கார் போன்ற பெர்ஃபார்மென்ஸ் அளிப்பதோடு, ஆஃப்ரோடுகளில் செலுத்துவதற்கான எஸ்யூவி கட்டுமான அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

நானுக் குவாட்ரோ கான்செப்ட் காரில் 5.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி10 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆடியின் 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் கியர்பாக்ஸ் அனைத்து சக்கரங்களுக்கும் பவரை கடத்தும்.

ஹெவி வெயிட்

ஹெவி வெயிட்

இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருப்பதால், 1900 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

0- 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டும் திறன் கொண்ட இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 305 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் லிட்டருக்கு 12.82 கிமீ மைலேஜ் தரும் என ஆடி தெரிவித்திருப்பதுதான் ஆட்டோமொபைல் துறையினரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

 ஏர் சஸ்பென்ஷன்

ஏர் சஸ்பென்ஷன்

இந்த காரில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது, கார் அதிவேகத்தில் செல்லும்போது இதன் கிரவுன்ட் கிளியரன்ஸ் 300 மிமீ வரை குறைந்துவிடும். ஆஃப்ரோடு அல்லது குறைந்த வேகத்தில் செல்லும்போது கிரவுன்ட் கிளியரன்ஸ் 40 மிமீ வரை அதிகரித்துக் கொள்ளும் வசதி கொண்டது.

 சிறப்பு வசதி

சிறப்பு வசதி

அதிவேகத்தில் சென்று வளைவுகளில் திரும்பும்போது, இந்த காரின் பின்புற வீல் முன்புற சக்கரத்திற்கு இணையாக 2.5 டிகிரி கோணத்தில் சாய்ந்து அதிக நிலைத்தன்மையை வழங்கும். மேலும், இதன் வீல் பேஸ் கூட 140 மிமீ வரை நீடித்துக் கொள்ளும்.

உற்பத்தி?

உற்பத்தி?

இந்த காரின் உற்பத்தி நிலை குறித்து இதுவரை ஆடி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2013, 11:32 [IST]
English summary
Do you feel this Audi concept looks very similar to some other car you have seen before? Would that car be the Italdesign Giugiaro Parcour concept, that impressed crowds at the Geneva Auto Show? You would perfectly right in thinking so because it is. named by Audi as Nanuk Quattro, this concept was designed in association with Italdesign Giugiaro.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+