தயாரிப்பு நிலை பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் - முழு விபரம்
பேட்டரியில் இயங்கும் கார், பைக் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது பிஎம்டபிள்யூ. ஐ3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த பிஎம்டபிள்யூ பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் தயாரிப்பு நிலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
சி எவொலியூஷன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச் சிறப்பான ஓட்டுதல் தரத்தை வழங்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவின் ஹாட் டாபிக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. விலையை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

கட்டுமானம்
600சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு இணையான பெர்ஃபார்மென்சை வழங்கும் என்பதே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய அம்சம். அதற்கு தக்கவாறு சிறப்பான கட்டுமானத்தை கொண்டிருக்கிறது.

ரேஞ்ச்
8 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்க முடியும்.

ஹெவி வெயிட்
பேட்டரி, சேஸீ உள்ளிட்ட முக்கிய பாகங்களால் இந்த ஸ்கூட்டரின் எடை 265 கிலோவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஹெவி வெயிட் கொண்ட ஸ்கூட்டராகவே இருக்கும்.

சார்ஜ் நேரம்
220v சாக்கெட் மூலம் இந்த ஸ்கூட்டர் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 4 மணி நேரம் பிடிக்கும்.

பவர்ஃபுல் மோட்டார்
இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் அதிகபட்சம் 47 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டாப் ஸ்பீடு
அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும். 0 - 50 கிமீ வேகத்தை 2.7 வினாடிகளிலும், 0- 100 கிமீ வேகத்தை 6.2 வினாடிகளிலும் தாண்டிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆற்றல் சேமிப்பு
சி எவொலியூஷன் ஸ்கூட்டரில் பிரேக் ஆற்றலை பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. அதேபோன்று, ஏபிஎஸ், பிஎம்டபிள்யூ டிராக்ஷன் கன்ட்ரோல் தொழில்நுட்பம், பகல் நேர ரன்னிங் விளக்குகள், டிஎஃப்டி வண்ண திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவை சிறப்பம்சங்களாக கூறலாம்.

டிரைவிங் மோடுகள்
ரோடு, ஈக்கோ புரொ, செயில் மற்றும் டைனமிக் என்ற நான்கு விதமான ஓட்டும் நிலைகளுக்கு தக்க எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.

ஓட்டுதல் நிலை - 1
'ரோடு' என்ற ஓட்டுதல் நிலைக்கு எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும்போது அதிகபட்ச ஆக்சிலேரஷனுடன், 50 சதவீத ஆற்றல் சேமிப்பை வழங்கும்.

ஈக்கோ புரொ
ஈக்கோ புரொ ஓட்டுதல் நிலைக்கு எஞ்சின் இயக்கத்தை மாற்றினால், ஆக்சிலேரேஷன் குறைக்கப்பட்டு, ஆற்றல் சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் இயங்கும்.

செயில்
ஆற்றல் சேமிப்பு குறைக்கப்பட்டு இடையூறு இல்லாமல் சீராக ஸ்கூட்டர் செல்வதற்கு இந்த ஓட்டுதல் நிலையை மாற்றிக் கொள்ளலாம்.

டைனமிக்
இந்த ஓட்டுதல் நிலையில் அதிகபட்ச பெர்ஃபார்மென்சை வழங்கும்.

உற்பத்தி?
தயாரிப்பு நிலை மாடலாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், விரைவில் உற்பத்தியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








