5,000 எச்பி பவர், 560 கிமீ டாப் ஸ்பீடு... மிரட்டும் புதிய சூப்பர் கார்!!
எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் சூப்பர் கார்களுக்கான மவுசு எப்போதுமே அதிகம். எனவே, உலகின் முன்னணி சூப்பர் கார் நிறுவனங்கள் வளைகுடா மார்க்கெட்டை மிக முக்கியமாக பார்த்து வருகின்றன.
இந்த நிலையில், துபாயில் நடந்து வரும் சர்வதேச வாகன கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய சூப்பர் கார் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெவெல் சிக்ஸ்டீன் என பெயரிடப்பட்ட இந்த சூப்பர் காரை துபாயை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெறுவதற்கான அம்சங்கள் கொண்ட இந்த புதிய சூப்பர் கார் பற்றிய மிரட்டலான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
லம்போர்கினி வெனினோ, பகனி ஸோண்டா கார்களை போன்றே சூப்பர் கார் தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த காரின் சைலென்சர் ஜெட் விமானத்தில் இருப்பது போன்ற ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இன்டிரியரிலும் பல சூப்பர் கார்களின் டிசைன் சாயல்கள் இருக்கின்றன.

பவர்
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் வி16 எஞ்சின் அதிகபட்சமாக 5,000 எச்பி பவரை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. உலகின் அதிவேக கார்களில் ஒன்றான புகாட்டி வேரோனில் 1,200 எச்பி திறன் கொண்ட எஞ்சின் கொண்ட நிலையில், இந்த கார் எஞ்சின் 5,000 எச்பி பவரை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு
மணிக்கு 560 கிமீ வேகம் வரை செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு தக்க வகையில் இந்த சூப்பர் கார் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்
0- 96 கிமீ வேகத்தை 1.8 வினாடிகளிலேயே எட்டிவிடுமாம். தற்போது உலகின் குறைந்த நேரத்தில் 0-96 கிமீ வேகத்தை எட்டிய சாதனையை ஏரியல் ஆட்டம் வி8 கார் பெற்றுள்ளது. ஏரியல் ஆட்டம் கார் 0- 96 கிமீ வேகத்தை 2.3 வினாடிகளில் தொட்டு சாதனையை படைத்தது. இந்த நிலையில், டெவெல் சிக்ஸ்டீன் கார் 1.8 வினாடிகளில் எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ
துபாய் மோட்டார் ஷோவில் வைக்கப்பட்டிருக்கும் இந்த டெவெல் சிக்ஸ்டீன் காரின் வீடியோவில் பார்த்து ரசிக்கலாம்.

சந்தேகம்
இந்த சூப்பர் கார் குறித்த தகவல்கள் இதுவரை சோதனை நடத்தி உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, அது உறுதிப்படுத்தும் வரை இந்த தகவல்கள் சந்தேகத்துக்குரியதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








