உலகின் முதல் ஃபார்முலா -1 எலக்ட்ரிக் ரேஸ் கார் அறிமுகம்!!
அடுத்த ஆண்டு செப்டம்பரில் எலக்ட்ரிக் கார்களுக்கான முதல் ஃபார்முலா- 1 கார் பந்தயம் துவங்க உள்ளது. இதற்காக, உலகின் முதல் ஃபார்முலா- 1 எலக்ட்ரிக் ரேஸ் காரை ரெனோ - ஸ்பார்க் நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்துள்ளன.
எஸ்ஆர்டி_01இ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் ரேஸ் காரை பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ அரங்கத்தில் நடந்த விழாவில் எஃப்ஐஏ தலைவர் ஜீன் டோட்த் மற்றும் ஃபார்முலா இ ஹோல்டிங்ஸ் சிஇஓ அலிஜான்ரோ அகாக் ஆகியோர் இணைந்து அறிமுகம் செய்தனர்.

எலக்ட்ரிக் கார் பந்தயம்
ஃபார்முலா - 1 கார் பந்தயங்கள் போன்றே பல்வேறு நாடுகளில் இந்த எலக்ட்ரிக் ரேஸ் கார்களுக்கான ஃபார்முலா - 1 பந்தயங்களும் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளன.

கட்டுப்பாட்டு நுட்பம்
இந்த புதிய பார்முலா-1 எலக்ட்ரிக் கார் சேஸீயை உருவாக்கியதோடு, எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார்களுக்கான எலக்ட்ரானிக் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் ரெனோ முக்கிய பங்கு வகிக்கும்.

பவர்ஃபுல் மோட்டார்
எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார்களில்270 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

தொழில்நுட்பம்
2014 ஃபார்முலா- 1 பாதுகாப்பு விதிமுறைகளின்படி இந்த கார்கள் தயாரிக்கப்படும். ஃபார்முலா- 1ல் பயன்படுத்தப்படும் பெட்ரோல் கார்களில் பயன்படுத்தப்படும் ஏராளமான தொழில்நுட்பங்கள் இந்த எலக்ட்ரிக் ரேஸ் கார்களிலும் பயன்படுத்தப்படும்.

10 அணிகள் பங்கேற்பு
முதல் எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார் பந்தயத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். ஆனால், எலக்ட்ரிக் ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் பங்கேற்க மொத்தம் 18 அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. மேலும், ஃபார்முலா- 1 பந்தயங்கள் போன்றே ஒவ்வொரு அணியும் தலா 2 டிரைவர்களை வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.

அணிகள்
எலக்ட்ரிக் ரேஸ் கார் ஃபார்முலா-1 பந்தயத்தில் பங்கேற்பதற்கு 3 அணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ரெனோ, இன்டிகார் ரேஸிங் டீம் மற்றும் அன்டிரெட்டி ஆட்டோஸ்போர்ட் ஆகியவையாகும்.

நாடுகள் பட்டியல்
பேங்காக், பீஜிங், பீனோஸ் ஏர்ஸ், லண்டன், ரோம், லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, புட்ரஜெயா, ரியோ டி ஜெனீரோ மற்றும் பெர்லின் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

டாப் ஸ்பீடு
ஃபார்முலா- 1 எலக்ட்ரிக் கார்கள் அதிகபட்சமாக மணிக்கு 217 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாக இருக்கும்.

2 கார்கள்
ஒரு போட்டிக்கு 2 கார்கள் ஒரு போட்டியில் ஒரு டிரைவர் 2 கார்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். பேட்டரி சார்ஜ் மூலம் ஒரு கார் 25 நிமிடங்கள் செல்லும். மொத்தம் ஒரு மணி நேரம் கொண்டதாக போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ஒரே நாள் மட்டும்
ஃபார்முலா- 1 பந்தயங்கள் தற்போது 3 நாட்கள் நடத்தப்படும் நிலையில், எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 பந்தயங்களுக்கான தகுதிச் சுற்று மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஒரே நாளில் நடைபெறும்.


Click it and Unblock the Notifications








