ஹோண்டாவின் சிவிக் டூரரில் ஓர் இன்பச் சுற்றுலா!
சுற்றுலா செல்வதற்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சிறந்த இடவசதியுடன், பொருட்களை குறைவில்லாமல் எடுத்துச் செல்வதற்கும் ஏற்ற அம்சங்கள் கொண்டதாக டூரர் ரக கார்கள் இருக்கின்றன. ஏனோ இந்திய மார்க்கெட்டில் டூரர் ரக கார்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில், ஹோண்டா கார் நிறுவனம் புத்தம் புதிய டூரர் காரை பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சிவிக் கார் அடிப்படையிலான இந்த புதிய கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படால் ஹோண்டாவுக்கு கூடுதல் பலத்தை பெற்றுத் தரலாம்.
இப்போது நீண்ட தூர பயணங்களுக்கு சொகுசான காராக விரும்பப்படும் இன்னோவா எம்பிவியின் மார்க்கெட்டையும் இந்த கார் பங்கு போடும் வாய்ப்பு உள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
பிற டூரர் கார்களிலிருந்து இந்த காரை வேறுபடுத்தும் வித்ததில் டிசைன் செய்துள்ளது ஹோண்டா.

நீட்டிக்கப்பட்ட சிவிக்
சிவிக் காரை 235 மிமீ நீட்டித்து இந்த காரை டிசைன் செய்துள்ளது ஹோண்டா. இதன்மூலம், சிறந்த இடவசதியை அளிக்கிறது.

பூட் ரூம்
இந்த காரில் 624 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கிறது. தவிர, பின் இருக்கையை மடக்கினால் பூட் ரூமை 1,668 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

மேஜிக் இருக்கை
இந்த காரின் இருக்கைகள் சிறப்பான இடவசதியை அளிக்கும் வகையில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

கார்கோ ஏரியா
இந்த காரின் பொருட்கள் வைப்பதற்கான பகுதியில் 2 மவுன்டெயின் பைக்குகளையும், 3 பெரிய அளவிலான சாம்ஸோனைட் சூட் கேஸ்களையும் வைக்க முடியும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

டிரைவிங் வசதி
காரில் இருக்கும் பொருட்கள் மற்றும் பயணிகளின் எடைக்கு தகுந்தவாறு கம்ஃபோர்ட், நார்மல், டைனமிக் ஆகிய மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷனில் காரின் டிரைவிங் அமைப்பை மாற்றிக் கொள்ளும் அடாப்டிவ் டேம்பர் சிஸ்டம் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இதன்மூலம், காரின் நிலைத்தன்மையும், சொகுசான பயணமும் உறுதி செய்யப்படும்.

எஞ்சின்
இந்த காரில் 118 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் ஐடிடெக் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கும்.

அறிமுகம்
பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் இந்த காரின் விலை விபரங்களை ஹோண்டா வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications








