ஹோண்டாவின் 'இன்பச் சுற்றுலா' கார் அறிமுகம்!!
பொருட்களை எடுத்து செல்வதற்கு அதிக இடவசதியுடன், உயர் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை தாங்கிய புதிய ஹோண்டா சிவிக் டூரர் கார் பிராங்க்ஃபர்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரத்யேக டிசைன் கொண்ட இந்த கார் ஹோண்டாவின் ஐரோப்பிய வடிவமைப்பு மையத்தின் பொறியாளர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
சிவிக் கார் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டாலும், அதிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தும் விதத்தில் டிசைன் செய்துள்ளது ஹோண்டா.

நீட்டிக்கப்பட்ட சிவிக்
சிவிக் காரை 235 மிமீ நீட்டித்து இந்த காரை டிசைன் செய்துள்ளது ஹோண்டா. இதன்மூலம், சிறந்த இடவசதியை அளிக்கிறது.

பூட் ரூம்
இந்த காரில் 624 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கிறது. தவிர, பின் இருக்கையை மடக்கினால் பூட் ரூமை 1,668 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

மேஜிக் இருக்கை
இந்த காரின் இருக்கைகள் சிறப்பான இடவசதியை அளிக்கும் வகையில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

கார்கோ ஏரியா
இந்த காரின் பொருட்கள் வைப்பதற்கான பகுதியில் 2 மவுன்டெயின் பைக்குகளையும், 3 பெரிய அளவிலான சாம்ஸோனைட் சூட் கேஸ்களையும் வைக்க முடியும் என்று ஹோண்டா

எஞ்சின்
இந்த காரில் 118 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் ஐடிடெக் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கும்.

அடாப்டிவ் சஸ்பென்ஷன்
காரில் இருக்கும் பொருட்கள் மற்றும் பயணிகளின் எடைக்கு தகுந்தவாறு கம்ஃபோர்ட், நார்மல், டைனமிக் ஆகிய மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷனில் காரின் டிரைவிங் அமைப்பை மாற்றிக் கொள்ளும் அடாப்டிவ் டேம்பர் சிஸ்டம் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இதன்மூலம், காரின் நிலைத்தன்மையும், சொகுசான பயணமும் உறுதி செய்யப்படும்.

பாதசாரிகளை கண்டறியும்
சாலையில் குறுக்கே வரும் பாதசாரிகளை கண்டறியும் தொழில்நுட்பம், வழித்தடம் மாறுவதை எச்சரிக்கும் வசதி, பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

ஹை பீம் பிரச்னை
எதிரில் வரும் வாகனங்களை கண்டுணர்ந்து ஹெட்லைட்டில் ஹை பீம் பிரகாசத்தை குறைத்து மீண்டும் கூட்டிக் கொள்ளும் வசதியும் உண்டு.

சிட்டி பிரேக் ஆக்டிவ் சிஸ்டம்
19 கிமீ.,க்கும் குறைவான வேகத்தில் செல்லும் போது நிகழும் விபத்துக்களை தடுக்க உதவும். ரேடார் மற்றும் லேசர் உதவியுடன் எதிரில் இருக்கும் பள்ளம், மேடுகள் மற்றும் பாதசாரிகளை கண்டுகொண்டு அதற்கு ஏற்ப தானியங்கி பிரேக்கை பிடித்து காரை நிறுத்தும் தொழில்நுட்பமாக இது தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








