எர்டிகாவின் போட்டியாளர் ஹோண்டா மொபிலோ எம்பிவி கார் அறிமுகம்

எர்டிகாவின் நேரடி போட்டியாளராக வர்ணிக்கப்படும் ஹோண்டாவின் புதிய எம்பிவி காரான மொபிலோ இந்தோனேஷிய மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது.

பிரியோ கார் அடிப்படையிலான இந்த புதிய எம்பிவி கார் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த காரை தாய்லாந்திலிருந்து செயல்படும் ஹோண்டாவின் ஆசிய பசிபிக் டிசைன் குழு மற்றும் இந்தோனேஷிய வடிவமைப்பு மைய எஞ்சினியர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். கூடுதல் விபரங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

பிரியோ அடிப்படையில் அமேஸை தொடர்ந்து வரும் மூன்றாவது கார் மாடல் மொபிலோ. 4.4 மீட்டர் நீளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2,650 மிமீ வீல் பேஸ் கொண்டிருக்கிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

மாருதி எர்டிகாவை போன்ற இந்த எம்பிவி காரும் 185 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதாக உள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்தோனேஷிய மார்க்கெட்டில் 1.5 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சினுடன், மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் விற்பனைக்கு வருகிறது.

உற்பத்தி

உற்பத்தி

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவிலுள்ள கரவாங் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

இந்தியாவில் அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

புதிய டீசல் எஞ்சின்

புதிய டீசல் எஞ்சின்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் பிப்ரவரியில் நடைபெறும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 1.5 லிட்டர் எர்த்ட்ரீம் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும்.

எர்டிகாவுக்கு போட்டி

எர்டிகாவுக்கு போட்டி

இந்தியா, இந்தோனேஷியா என இரு மார்க்கெட்டிலும் மாருதி எர்டிகாவுக்கு கடும் நெருக்கடியை தரும் ஹோண்டா மொபிலோ.

 விலை

விலை

இந்தோனேஷியாவில் 150 - 180 மில்லியன் ருபியா(இந்திய மதிப்பில் ரூ8.40 லட்சம் முதல் ரூ.10.05 லட்சம்) விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது ஹோண்டா மொபிலோ.

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2013, 12:46 [IST]
English summary
Japanese car maker Honda cars has unveiled of its much awaited MPV car Mobilo in Indonesian auto show today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+