அழகு ரசம் சொட்டும் கியாவின் காம்பெக்ட் கிராஸ்ஓவர்!!

By Saravana

ஹூண்டாய் அங்கமான கியா பிராண்டின் புதிய கிராஸ்ஓவர் கான்செப்ட்டின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. படு அசத்தலான இந்த கான்செப்ட் கார் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

ஐரோப்பிய வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் நீரோ என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் அடுத்த தலைமுறை காம்பெக்ட் எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புதிய காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காணலாம்.

ஐரோப்பிய டிசைன்

ஐரோப்பிய டிசைன்

இந்த புதிய நீரோ கான்செப்ட் எஸ்யூவி பிராங்க்ஃபர்ட்டில் உள்ள கியாவின் ஐரோப்பிய டிசைன் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 தலைமை டிசைனர்

தலைமை டிசைனர்

இந்த காம்பெக்ட் எஸ்யூவி வடிவமைப்பு திட்டத்துக்கு கிரிகோரி கில்லாம் தலைமை வகித்தார். இவர்தான் கியா ஐரோப்பிய டிசைன் மையத்தின் தலைவரும் ஆவார்.

 ஸ்டைல் எஸ்யூவி

ஸ்டைல் எஸ்யூவி

இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்டைலாகவும், ஒளிரும் தன்மை கொண்ட கலவை பொருட்களை கொண்டும் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கியா தெரிவித்துள்ளது.

 பிரத்யேக அம்சம்

பிரத்யேக அம்சம்

காம்பெக்ட் காரில் இதுவரை தரப்படாத வசதிகளை நீரோ கொண்டிருக்கும் என கியா தெரிவித்துள்ளது.

 மதிப்பீடு

மதிப்பீடு

ஐரோப்பிய வாடிக்கையாளர்களிடம் எந்தளவு வரவேற்பு பெறுகிறது என்பதை மதிப்பிடவே இந்த எஸ்யூவியை வடிவமைத்துள்ளதாகவும், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து எதிர்காலத்தில் புதிய மாடல்களை வடிவமைக்க உள்ளதாகவும் கியா தெரிவித்துள்ளது.

 சிறப்புகள்

சிறப்புகள்

சிசர் கதவுகள், வார்ப்பு இருக்கைகள், புதிய தலைமுறை இன்டிரியர், எல்இடி விளக்கு இன்டிகேட்டர்கள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

 உற்பத்தி

உற்பத்தி

இந்த எஸ்யூவியை வாடிக்கையாளர்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு பெறுகிறது என்பதை சோதிக்க கியா வடிவமைத்துள்ளதாக தெரிகிறது. எனவே, இது உற்பத்தி நிலையை எட்டுவதில் சந்தேகம் இருக்கிறது. அதேவேளை, எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் மாடல்களில் நீரோ டிசைன் மற்றும் அம்சங்களை கியா பயன்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2013, 9:17 [IST]
English summary
The South Korean automaker will reveal its B-segment concept car at the 65th Frankfurt Auto Show, which is on September 10th. There is not much to go on with currently as Kia has withheld all information, but go ahead and view the new images.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+