சென்னையில் பிரம்மாண்ட கார் கண்காட்சி!

ரன் டிராக்ஸ் என்ற நிறுவனம் இந்த ஆட்டோமொபைல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த ஆட்டோமொபைல் திருவிழாவில் கார் டீலர்கள், யூஸ்டு கார் டீலர்கள், கார் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், ஆக்சஸெரீஸ் விற்பனையாளர்கள், நேவிகேஷன் சிஸ்டம் விற்பனையாளர்கள், இன்டிரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைன் நிறுவனத்தினர் பங்கு கொள்கின்றனர்.
இதுதவிர, டயர் தயாரிப்பாளர்கள், கால் டாக்ஸி நிறுவனங்கள், கார் ஆடியோ, ஸ்பேர் பார்ட்ஸ் டீலர்களும் பங்கேற்க உள்ளனர். அதாவது,கார் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளையும் ஒரே குடையின் கீழ் பெறும் நோக்குடன் இந்த ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ரன் டிராக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ செந்தில்நாதன் கூறியிருப்பதாவது," கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த கண்காட்சி மிக பயனுள்ளதாக அமையும். இந்த கண்காட்சியில் புதிய காரை ஸ்பாட் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம், ஐபேட், டேப்லெட் ஆகியவற்றை டீலர்கள் பரிசாக வழங்க உள்ளனர்,
மேலும், எளிய முறையில் 80 முதல் 100 சதவீதம் வரை கார் கடன் பெறும் திட்டங்களும் கிடைக்கும். கார் வாங்க வருகிறவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்ற வகையில் உணவு திருவிழா, ரங்கோலி போட்டி, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகளும் நடைபெற உள்ளது," என்றார்.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி அரங்கு திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கோடையில் ஓர் குதூகலத்துக்கான கண்காட்சியாக இது இருக்கும்.


Click it and Unblock the Notifications








