வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டருக்கு மாற்றாக வரும் புத்தம் புதிய ஸ்கூட்டர்

By Saravana

பழமையும், பாரம்பரியமும் கலந்த டிசைனில் புதுமைகளை புகுத்தி புதிய ஸ்கூட்டர் மாடல்களை வெஸ்பா தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் இதுபோன்ற ஸ்கூட்டர்களால் வெஸ்பாவுக்கு நன்மதிப்பு இருந்து வருகிறது.

அந்த வகையில், பிரைமவெரா என்ற புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலை இத்தாலி, மிலன் ஆட்டோமொபைல் கண்காட்சியில் வெஸ்பா அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய மாடல் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எல்எக்ஸ் 125 மற்றும் விஎக்ஸ் 125 மாடல்களுக்கு மாற்றாக விற்பனைக்கு வர இருக்கிறது.

பிரைமவெரா

பிரைமவெரா

1968ம் ஆண்டு பிரைமவெரா என்ற பெயரை தனது ஸ்கூட்டருக்கு முதன்முதலாக பயன்படுத்தியது. அந்த பெயரை மீண்டும் தனது புதிய ஸ்கூட்டர் மாடலுக்கு சூட்டியுள்ளது.

3 எஞ்சின்கள்

3 எஞ்சின்கள்

வெஸ்பா பிரைமவெரா ஸ்கூட்டர் 3 எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. 50சிசி, 125சிசி மற்றும் 150சிசி எஞ்சின்களுடன் பிரைமவெரா வர இருக்கிறது. 50சிசி எஞ்சின் 2 ஸ்ட்ரோக் மற்றும் 4 ஸ்ட்ரோக் கொண்ட மாடல்களில் கிடைக்கும். இந்தியாவில் 125சிசி திறன் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படும்.

மைலேஜ்

மைலேஜ்

புதிய பிரைமவெரா ஸ்கூட்டர் அதிகபட்சமாக லிட்டருக்கு 64 கிமீ மைலேஜ் தரும் என வெஸ்பா தெரிவிக்கிறது. இந்த மைலேஜ் 50சிசி ஸ்கூட்டர் மாடலில்தான் கிடைக்கும் என நம்பலாம்.

டிசைன்

டிசைன்

முகப்பு டிசைன் எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை நினைவூட்டுவதாகவே இருக்கிறது. மேலும், வெஸ்பா 946 ஸ்கூட்டரில் இருந்தும் சில டிசைன் தாத்பரியங்கள் எடுத்து கையாளப்பட்டுள்ளன.

 மாற்றங்கள்

மாற்றங்கள்

புதிய வடிவமைப்பு கொண்ட இருக்கை, புகைப்போக்கி மஃப்லர், 5 ஸ்போக்குகள் கொண்ட வீல்கள், கூடுதல் இடவசதியுடன் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி ஆகியவை பிரைமவெராவிற்கு கூடுதல் மதிப்பையும், பொலிவையும் தருகிறது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன்புறத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் அனலாக் மற்றும் எல்சிடி டிஸ்ப்ளே ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

 இந்திய பிரவேசம்?

இந்திய பிரவேசம்?

அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. விலை உள்ளிட்ட இதர விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Most Read Articles
English summary
2014 Vespa Primavera unveiled at the 2013 EICMA show in Milan, Italy will make its way around the globe where it will replace the Vespa LX models. In India, Vespa could either replace the LX/VX or introduce the Primavera as a brand new model. We'll have to wait and see.
Story first published: Tuesday, November 12, 2013, 10:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X