தாய் பாசம்... பிஎம்டபிள்யூவுக்காக ஸ்பெஷல் கார் வெளியிட்ட ரோல்ஸ்ராய்ஸ்!!

By Saravana

இதுவரை தாய் நிறுவனத்துக்கு ஒரு கார் நிறுவனம் இந்தளவுக்கு மரியாதை செய்திருக்கும் என்று கூற இயலவில்லை. ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் தனது தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூ மீதான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஸ்பெஷல் எடிசன் காரை வெளியிட்டுள்ளது.

அப்படி அந்த காரில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? சுவாரஸ்யம் இருக்கிறது. பிஎம்டபிள்யூ கையில் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆவதை நினைவுகூறும் வகையில், செலஸ்ட்டியல் எடிசன் என்ற பெயரில் ஸ்பெஷல் பான்டம் காரை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டுள்ளது.

அந்த காரின் உட்புற கூரையை மிக விசேஷமாக வடிவமைத்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ். ஆம். 2003ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி நள்ளிரவு பிஎம்டபிள்யூ கையில் ஒப்படைக்கப்பட்டபோது வானில் இருந்த அதே நட்சத்திர அமைப்பு கொண்டதாக உள்கூரையில் 1,000 சிறிய விளக்குகளை பொருத்தி இந்த ஸ்பெஷல் எடிசன் பான்டம் காரை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டுள்ளது.

தரிசனம்

தரிசனம்

பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் இந்த சிறப்பு பதிப்பு கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நட்சத்திர அமைப்பு

நட்சத்திர அமைப்பு

நட்சத்திர அமைப்புடன் கையால் பொருத்தப்பட்டிருக்கும் சின்னஞ்சிறிய ஆப்டிக் ஃபைபர் விளக்குகள்.

பிரத்யேக பெயின்ட்

பிரத்யேக பெயின்ட்

பெயின்டில் பிரத்யேக கண்ணாடி துகள்கள் கலந்த கலவையில் பெயின்டிங் செய்யப்பட்டுள்ளது.

லெதர் இருக்கை

லெதர் இருக்கை

காரின் வண்ணத்திலேயே மிக மிக உயர்தரமான லெதர் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

பிக்னிக் செட்

பிக்னிக் செட்

இந்த காருடன் நட்சத்திர அமைப்பு டிசைன் போடப்பட்ட பிக்னிக் செட்டையும் ரோல்ஸ்ராய்ஸ் வழங்க உள்ளது.

 தாய்க்கு மரியாதை

தாய்க்கு மரியாதை

மொத்தத்தில் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூவுக்கு மிகுந்த சிரத்தையுடன் இந்த மரியாதையை செய்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ்.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2013, 13:35 [IST]
English summary
At IAA in Frankfurt Rolls Royce is showcasing a special one-off Phantom saloon. The special car marks the 10th anniversary of Rolls Royce passing into the hands of the BMW Group. Since 75 percent of all Phantoms and Ghost models have something bespoke in them, this one-off may look like just another custom built Rolls, but peak inside and there is something different about Starlight Headliner.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+