இந்தோனேஷியாவில் 7 சீட்டர் வேகன்-ஆர் எம்பிவி - சுஸுகி அறிமுகம்!
7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட வேகன் ஆர் காரை சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. இந்தோனேஷிய சர்வதேச மோட்டார் ஷோவில் இந்த புதிய எம்பிவி கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
டட்சன் கோ ப்ளஸ், ஹோண்டா மொபிலியோ ஆகிய எம்பிவி கார்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், எந்த தகவலும் இன்றி இந்த புதிய எம்பிவி காரை பார்வைக்கு வைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சுஸுகி. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

4 மீட்டர் மேஜிக்
கரிமுன் வேகன் ஆர் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எம்பிவியின் விசேஷ அம்சம் என்னவெனில் சாதாரண ஹேட்ச்பேக் காரை போன்றே 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது.

7 சீட்டர்
4 மீட்டர் காராக இருந்தாலும், 7 பேர் பயணிக்கும் வகையில் இருக்கை வசதியை அமைத்துள்ளது சுஸுகி. கடைசி வரிசையில் சிறியவர்கள் அமர்ந்து செல்லும் வசதியுடன் இருக்கிறது.

கான்செப்ட் மாடல்
இது கான்செப்ட் மாடல்தான் என்றும் உற்பத்திக்கு கொண்டு செல்வது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் சுஸுகி தெரிவித்துள்ளது.

கிரீன் கார்
அதேவேளை, உற்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டால், இது இந்தோனேஷிய அரசின் சுற்றுச்சூழலுக்கு உகந்த குறைந்த விலை மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நாட்டு அரசின் வரிச்சலுகை கிடைக்கும்.

செக்மென்ட்
விற்பனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் எர்டிகாவுக்கு கீழே நிலைநிறுத்தப்படும்.

விலை
டட்சன் கோ ப்ளஸ் எம்பிவிக்கு இணையாக இந்தோனேஷியாவில் 100 மில்லியன் ருபியாவுக்கும் இந்திய மதிப்பில் ரூ.5.37 லட்சம் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு அவசியம்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் மாருதிக்கு மிகுந்த பங்களிப்பை கொடுக்கும் என நம்பலாம்.
Image Source: Kompas otomotif


Click it and Unblock the Notifications








