பச்சோந்தி போன்று நிறம் மாறும் காரை அறிமுகப்படுத்தும் டொயோட்டா

By Saravana

ஓட்டுபவரின் விருப்பத்திற்கு ஏற்ப வெளிப்புறத்தில் வண்ணம் மாறும் காரின் கான்செப்ட்டை டொயோட்டா அறிமுகம் செய்ய உள்ளது. வரும் 20ந் தேதி துவங்கும் டோக்கியோ மோட்டார் ஷோவில் இந்த புதிய காரை பார்வைக்கு வைக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

இத்துடன் சேர்த்து 5 புதிய கான்செப்ட் மாடல்களை டொயோட்டா அறிமுகம் செய்ய உள்ளது. பச்சோந்தி கார் உள்பட டொயோட்டா அறிமுகம் செய்ய இருக்கும் கான்செப்ட் கார் மாடல்கள் பற்றிய விபரங்கள் இதோ உங்களுக்காக ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

பச்சோந்தி கார்

பச்சோந்தி கார்

டொயோட்டா எஃப்வி2 கான்செப்ட் என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய கான்செப்ட் மாடல் 3 சக்கரங்களை கொண்டது. பார்ப்பதற்கு பச்சோந்தி தோற்றத்திலேயே இருக்கும் இந்த காரில் இருக்கும் தொழில்நுட்பம் மூலம் ஓட்டுபவரின் மனநிலை மற்றும் முகபாவனைகளை வைத்து காரின் வெளிப்புற நிறத்தை மாற்றிக் கொள்ளும்.

 ஹைட்ரஜன் கார்

ஹைட்ரஜன் கார்

டொயோட்டா அறிமுகம் செய்ய இருக்கும் ஹைட்ரஜனில் இயங்கும் கார் மாடல் இது. 5 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த காரில் ஒருமுறை எரிபொருள் நிரப்பும்போது 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினி வேன் கான்செப்ட்

மினி வேன் கான்செப்ட்

வாக்ஸி மற்றும் நோயா என்ற இரு மினி வேன் கான்செப்ட்டுகளையும் டொயோட்டா அறிமுகம் செய்ய உள்ளது. அதிக இடவசதி கொண்டதாக கட்டமைக்கப்படும் இந்த மினி வேன்கள் எதிர்கால போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்களை கொண்டிருக்கும்.

மினி வேன் கான்செப்ட்

மினி வேன் கான்செப்ட்

பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் மாடல்களில் வர இருக்கும் இந்த மினி வேன்களை அடுத்த ஆண்டு ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

 டாக்சி கான்செப்ட்

டாக்சி கான்செப்ட்

டாக்சி மார்கெட்டுக்கு ஏற்ற அம்சங்களுடன் டொயோட்டா வெளியிட்டிருக்கும் கான்செப்ட் மாடல் இது. ஜேபிஎன் டாக்சி என்ற பெயரில் இந்த காரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 7, 2013, 10:25 [IST]
English summary
Toyota's Five new vehicle concepts will make their world debut at the Tokyo motor show on 20 November. Here is Toyota's new upcoming concepts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+