மிக அழகான, கம்பீரமான புதிய பிக்கப் டிரக்: ஜிஎம் அறிமுகம்
அமெரிக்க மார்க்கெட்டில் நடுத்தர வகை பிக்கப் டிரக்குகளுக்கு பெரிய அளவிலான மார்க்கெட் இல்லை. இந்த செக்மென்ட்டில் டொயோட்டா டகோமா மற்றும் நிசான் ஃப்ராண்டியர் ஆகியவை மட்டுமே விற்பனையில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மார்க்கெட்டிலிருந்து விலகியே இருந்து வருகின்றன. இந்த நிலையில், டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் புதிய பிக்கப் டிரக் மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

இரு மாடல்கள்
ஜிஎம்சி பிராண்டில் கேன்யோன் மற்றும் செவர்லே பிராண்டில் கொலராடோ ஆகிய இரு நடுத்தர வகை புதிய பிக்கப் டிரக் மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

எஞ்சின்
ஜிஎம்சி கேன்யோன் பிக்கப் டிரக்கில் 193 பிஎச்பி ஆற்றலை வழங்குவம் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனலாக கிடைக்கும். செவர்லே கொலராடோவிலும் இதே எஞ்சின் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

ஆட்டோமேட்டிக் மாடல்
தவிரவும், 3.6 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஆட்டோமேட்டிக் மாடலிலும் கேன்யோன் கிடைக்கும். இந்த மாடல் 302 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டது. செவர்வே கொலராடோவை விட ஜிஎம்சி கேன்யோன் தோற்றத்தில் மிகச் சிறப்பானதாக தெரிகிறது.

அம்சங்கள்
புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சி வடிவிலான எல்இடி பகல் நேர ரன்னிங் விள்ககுகள் ஆகியவை கூடுதல் வசீகரத்தை கொடுக்கின்றன. ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வைஃபை ஹாட்ஸ்பாட், 8 இஞ்ச் டஸ்ட் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை ஆப்ஷனலாக கிடைக்கும்.

4 வீல் டிரைவ்
4 வீல் டிரைவ் மாடல் ஆப்ஷனும் உண்டு. இந்த மாடலில் சென்டர் டிஃபரன்ஷியல் இல்லாமல் ஆட்டோ டிராக் எனும் புதிய தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. ஒருவேளை, பின் சக்கரங்கள் வழுக்கினால், தானாகவே முன் வீல்களுக்கும் பவர் செலுத்தப்படும்.

விலை
செவர்லே கொலராடோவைவிட கூடுதல் வசதிகளிலும், விலையிலும் ஜிஎம்சி கேன்யோன் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








