இதுதான் அடுத்த தலைமுறை ஃபோர்டு எண்டெவர்: டிசைன் எப்படியிருக்கு?
ஃபோர்டு எவரெஸ்ட் என்ற பெயரில் அடுத்த தலைமுறை ஃபோர்டு எண்டெவர் கார் முதல்முறையாக பேங்காங் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய மாடலைவிட முற்றிலும் மாறுபட்ட டிசைனில் வரும் இந்த புதிய ஃபோர்டு எவரெஸ்ட் பிரிமியம் எஸ்யூவி ஆசிய மார்க்கெட்டுகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவிலும் விற்பனைக்கு கொண்டு செல்லவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

டிசைன்
தற்போதைய மாடலில் இருந்து காரின் டிசைன் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. ஹெட்லைட்டுகள், முகப்பு கிரில், ஸ்கிட் பிளேட் ஆகியவை இந்த பிரிமியம் எஸ்யூவிக்கு அழகூட்டுகிறது.

பின்புறம்
பின்புறத்தில் டெயில்லைட்டுகளை இணைக்கும் விதமாக குரோம் பட்டை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்திலும் பம்பரும், ஸ்கிட் பிளேட்டும் மிகச்சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. ஆஃப் ரோடு டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதையும் காணலாம்.

எஞ்சின்
இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்படும். அதேபோன்று, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும்.

இந்தியாவில் உற்பத்தி
ஆசிய மார்க்கெட்டுக்கான அம்சங்களை கொண்ட இந்த புதிய எஸ்யூவி இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தாய்லாந்திலிருந்து உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

போட்டியாளர்கள்
இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர், மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு இது நேரடி போட்டியை தரும்.


Click it and Unblock the Notifications








