புதிய மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்

By Ravichandran

டுகாட்டி நிறுவனம் தங்களின் புதிய மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் மோட்டார்சைக்கிளை இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சமீப காலமாக, டுகாட்டி நிறுவனம், ஏராளமான மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது, புதிய மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பெயர் காரணம்;

பெயர் காரணம்;

இத்தாலிய மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமான, டுகாட்டி நிறுவனத்தின் இந்த மாடல் பைக்கிற்கு புதிய மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் எடிஷன் என்று பெயரிடபட்டுள்ளது.

அமெரிக்காவின், கொலராடோ பகுதியில், பைக்ஸ் என்ற பெயரில் ஒரு மலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆட்டோமோபைல் மற்றும் மோட்டார்சைக்கிள் மூலம் மலை ஏறும், ஒரு புகழ் வாய்ந்த போட்டி நடத்தபடுகிறது.

இதனை கொண்டாடும் விதமாக, டுகாட்டியின் இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் மோட்டார்சைக்கிள் என்று பெயர் சூட்டபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டுகாட்டியின் புதிய மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 160 பிஹெச்பி-யையும், 136 என் எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மேலும், இந்த மோட்டார் சைக்கிளில், டிவிடி எனப்படும் டுகாட்டியின் டெஸ்மோட்ரோமிக் வேரியபல் டைமிங் சிஸ்டம் வசதியும் உள்ளது.

மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் / ஸ்டாண்டர்ட் மாடல்;

மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் / ஸ்டாண்டர்ட் மாடல்;

இந்த மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன், 2015 மல்டிஸ்ட்ராடா மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

ஸ்டாண்டர்ட் மாடல் மோட்டார்சைக்கிளை ஒப்பிடுகையில், மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் மோட்டார்சைக்கிளின் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் முழுவதுமாக அட்ஜஸ்ட் (மெக்கானிக்கல முறையில்) செய்யக்கூடிய ஓலின்ஸ் சஸ்பென்ஷன் முறைகள் உள்ளது.

மேலும், மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் மோட்டார்சைக்கிளில் கார்பன் ஃபைபர் டெர்மிக்னோனி மஃப்ளர் மற்றும் விண்ட்ஷீல்ட் உள்ளது. மேலும், இதன் மூன்று ஸ்போக்கள் கொண்ட சக்கரத்தில் ஸ்டிரைப்களும் உள்ளது.

கஸ்டமைசேஷன் வாய்ப்புகள்;

கஸ்டமைசேஷன் வாய்ப்புகள்;

மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் 3 விதமான கஸ்டமைசேஷன் வாய்ப்புகளுடன் வருகின்றது.

டூரிங் பேக், அர்பன் பேக் மற்றும் எண்ட்யூரோ பேக் என்ற பெயர்களில் இந்த கஸ்டமைசேஷன் வாய்ப்புகள் வழங்கபடுகிறது.

டூரிங் பேக்;

டூரிங் பேக் கஸ்டமைசேஷனில், ஹீட்டட் கிரிப்ஸ், சேட்டல்பேக்கள் மற்றும் செண்டர் ஸ்டாண்ட் உள்ளிட்டவை பொருத்தப்படுகிறது.

அர்பன் பேக்;

அர்பன் பேக் கஸ்டமைசேஷனில், டாப் கேஸ், யூஎஸ்பி-யுடன் கூடிய லாக்கபல் (பூட்டகூடிய) டேங்க் பேக் உள்ளிட்டவை பொருத்தப்படுகிறது.

எண்ட்யூரோ பேக்;

எண்ட்யூரோ பேக் கஸ்டமைசேஷனில், டூராடெக் இஞ்ஜின் / ரேடியட்டர் கிராஷ் பார்கள், சம்ப் கார்ட், வைட் (அகன்ற) கிக்ஸ்டேண்ட் பேஸ் மற்றும் ஆஃப்-ரோட் ஃபுட்பெக்கள் உள்ளிட்டவை பொருத்தப்படுகிறது.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் மோட்டார்சைக்கிள் சிகப்பு மற்றும் வைட் (வெள்ளை) ரேஸ் லிவரி நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றது.

ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோ;

ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோ;

ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோ 2015, இத்தாலியில் உள்ள மிலானோ நகரத்தில் நடைபெற உள்ளது.

இது, நவம்பர் 19, 2015 முதல் நவம்பர் 22, 2015 தேதி வரை நடை பெற உள்ளது. உலக அளவில் இரு சக்கர வாகனங்களுக்காக பிரத்யேகமாக நடத்தபடும் மோட்டார் ஷோ இது என்பது குறிப்பிடதக்கது.

மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் வீடியோ;

மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன் மோட்டார்சைக்கிளின் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு வழங்கபடுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 18, 2015, 14:10 [IST]
English summary
Ducati Unveils New Multistrada 1200 Pikes Peak Edition At EICMA Motorcycle Show 2015. This special edition is based on the 2015 Multistrada. It is named after the annual automobile and motorcycle hill climb race, being held Pikes Peak in Colorado, USA.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+