நிஸ்ஸானின் ஐடிஎஸ் கான்செப்ட் கார் 2015 டோக்கியோ மோட்டர் ஷோவில் அறிமுகம்

நிஸ்ஸான் நிறுவனத்தின் ஐடிஎஸ் கான்செப்ட் கார் 2015 டோக்கியோ மோட்டர் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. டோக்கியோ மோட்டர் ஷோ, அக்டோபர் 29 துவங்கி, நவம்பர் 8-ஆம் தேதி வரை, ஜப்பானின் தலைநகரில் டோக்கியோவில் நடைபெறுகின்றது.

நிஸ்ஸானின் மோட்டர்ஸ் நிறுவனத்தின் இந்த கான்செப்ட் கார் ஓர் முழுமையான எலகட்ரிக் மாடலாக உள்ளது. இது நிஸ்ஸானின் பூஜ்ஜியம் மாசு வெளிப்பாடு (ஃஜீரோ எமிஷன்) மற்றும் தானியங்கி வாகன இயக்கம் என்ற இரு முக்கிய கொள்கைகளை ஒரு சேர ஒருங்கிணைக்கும், வருங்கால நோக்குடைய காராக திகழ்கிறது.

எதிர்கால போக்குவரத்து மற்றும் கார், ஓட்டுநருக்கு இடையில் உள்ள உறவை புரட்சிகரமாக்கும் பணியில் நிஸ்ஸான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தி நிஸ்ஸான் ஐடிஎஸ் அனுபவம்;

தி நிஸ்ஸான் ஐடிஎஸ் அனுபவம்;

நிஸ்ஸான் ஐடிஎஸ் கான்செப்ட் கார், ஒரு மாறுபட்ட அனுபவத்தையும், வருங்காலத்தின் பிம்பமாகவும் திகழ்கிறது. இது 2 டிரைவிங் மோட்களை (வாகனங்களை இயக்கும் முறைகள்) கொண்டுள்ளது.

பைலட் டிரைவ் மோட்;

பைலட் டிரைவ் மோட் மூலம், இந்த எலக்ட்ரிக் காரை இயக்கும் போது, இது டிரைவரின் தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் டிரைவருக்கு பிடித்தமான தேர்வுகளை அப்படியே பின்பற்றும்.

மேனுவல் டிரைவ் மோட்;

மேனுவல் டிரைவ் மோட் மூலம், ஐடிஎஸ் கான்செப்ட் காரை இயக்கும் போது, டிரைவருக்கு உதவிகரமாக இருக்கிறது. தவிர்க்க முடியாத மோதல்கள் நிகழும் நிலை ஏற்பட்டால், விபத்தினை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுத்து டிரைவருக்கு உதவிகள் செய்யும்.

இண்டிரியர்;

இண்டிரியர்;

தி நிஸ்ஸான் ஐடிஎஸ் கான்செப்ட் காரின் நீண்ட வீல்பேஸ் கொண்டுள்ளது. இதனால், 4 பேர் மிக வசதியாக உட்காரும் வகையில் இதில் இடம் உள்ளது.

பைலட் டிரைவ் மோட் அல்லது மேனுவல் டிரைவ் மோட் என இரு மோட்களில் மேற்கொள்ளப்படும் தேர்வுகளை பொறுத்து, இண்டீரியர் அமைப்புகள் மாறும் வகையில், இஞ்ஜினியர்கள் இந்த எலக்ட்ரிக் காரை வடிவமைத்துள்ளனர்.

பைலட் டிரைவ் மோட் மூலம் காரை இயக்கும் போது, ஸ்டியரிங் வீல், சற்று பின்னோக்கிச் செல்கிறது. இதையடுத்து, இன்ஸ்ட்ருமெண்ட் பேனலின் மையப்பகுதி மற்றும் பெரிய ஃப்ளாட் ஸ்க்ரீன் சற்று முன் நோக்கி வெளிவருகிறது. இதனால், கேபின் மேலும் இடம் நிறைந்ததாக மாறிவிடுகிறது.

பைலட் டிரைவ் மோட் மற்றும் மேனுவல் டிரைவ் மோட்களுக்கு இடையிலான பரிமாற்றம், 2 முன் இருக்கைகளுக்கு இடையில் உள்ள பிடி கமாண்டர் எனப்படும் ஸ்விட்ச்-சினை இயக்குவதன் மூலம் செய்ய முடியும்.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

நிஸ்ஸான் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் ஸ்டைலையும் ஒன்றாக ஒருங்கிணைத்துள்ளது. சில்வர் பாடி லைன் கொண்ட ஐடிஎஸ் கான்செப்ட் காரில், எல்ஈடி விளக்குகளால் ஆன இண்டென்ஷன் இண்டிகேட்டர் என பெயர் சூட்டப்பட்ட அமைப்பு உள்ளது.

பாதசாரிகளோ அல்லது சைக்ளிஸ்ட்களோ காரின் அருகே சென்றால், இந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே சிகப்பு நிறமாக மாறி, அருகில் உள்ளவர்களுக்கு "ஆஃப்டர் யூ" (முதலில் நீங்கள் செல்லுங்கள் என்ற) சமிக்ஞையை வழங்கும்.

நெடுந்தூர பயணங்களுக்கு இவி டெக்னாலஜி;

நெடுந்தூர பயணங்களுக்கு இவி டெக்னாலஜி;

60 கே.டபுள்யூ.ஹெச் என்ற அளவில் உயர் திறன் கொண்ட ஐடிஎஸ் கான்செப்ட் காரின் பேட்டரி அமைப்பு நெடுந்தூர பயணங்களுக்கு ஏதுவாக உள்ளது.

இதையும் தாண்டி, ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்லட் மூலம் இயக்கபடும் பைலட்டட் பார்க் என்ற மிக உயரிய தொழில்நுட்பமும், வைர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்த ஐடிஎஸ் கான்செப்ட் காரில் கொட்டிகிடக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து;

டிரைவ்ஸ்பார்க் கருத்து;

நிஸ்ஸான் ஐடிஎஸ் கான்செப்ட் கார், நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தின் கலங்கரை விளக்கம் போல் திகழ்கிறது என்று கூறலாம்.

நிஸ்ஸான் ஐடிஎஸ் கான்செப்ட் காரின் அசத்தலான யூட்யூப் வீடியோ;

நிஸ்ஸான் ஐடிஎஸ் கான்செப்ட் காரின் அசத்தலான யூட்யூப் வீடியோவை காணலாம்

More from DriveSpark

Article Published On: Wednesday, October 28, 2015, 18:36 [IST]
English summary
Nissan Unveils The IDS Concept (Electric Vehicle) at Tokyo Motor Show. This concept vehicle embodies Nissan's vision of the future of autonomous driving and zero emission electric vehicles. Nissan is also working on technologies, which will revolutionise the relationship between car and driver, and future mobility.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+