யமாஹா ஸ்போர்ட்ஸ் ரைட் கார், 2015 டோக்கியோ மோட்டர் ஷோவில் அறிமுகம்

By Ravichandran

யமாஹா நிறுவனம், யமாஹா ஸ்போர்ட்ஸ் ரைட் கான்செப்ட் காரை, 2015 டோக்கியோ மோட்டர் ஷோவில் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஜப்பான் பல ஆண்டுகளாக கெய் கார் ஃபிளாசஃபி எனப்படும் சிறிய ரக கார் சித்தாந்தத்தை போதித்து வந்தது. மஸ்தா நிறுவனம் இந்த தத்துவத்தை மிக மும்மரமாக பின்பற்றி வந்தது. இப்போது, யமாஹா நிறுவனமும் இந்த பாதையில் செல்ல துவங்கியுள்ளனர்.

இரு சக்கர வாகனங்களில் மட்டுமே மிகுந்த கவணம் செலுத்தி வந்த யமாஹா, இப்போது நான்கு சக்கர வாகனங்களின் பக்கமாகவும் தங்களின் கவணத்தை செலுத்துகின்றனர். இந்த யமாஹா ஸ்போர்ட்ஸ் ரைட் கான்செப்ட் கார் மிகுந்த எடை குறைவாக உள்ளதே, இதன் முக்கியமான சிறப்பம்சமாகும்.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

யமாஹா ஸ்போர்ட்ஸ் ரைட் கான்செப்ட் காரின் வடிவமைப்பானது, மெக்லாரனின் எஃப் 1 வாகனங்களை வடிவமைக்கும் கார்டன் முர்ரே அவர்களால் வடிவமைக்கபட்டுள்ளது. சாலைகளிலும், டிராக்களிலும், மற்றும் வடிவமைக்கும் வாகனங்களில் கார்பன் ஃபைபரை அதிக அளவில் உபயோகபடுத்தும் வழக்கத்தை கார்டன் கொண்டுள்ளார்.

எடை குறைவான இந்த கட்டமைப்பின் ரகசியமே, அதிக அளவிலான கார்பன் ஃபைபரின் அமைப்பினால் தான் என்று கூறலாம். இந்த காருக்காக, முர்ரே ஐஸ்ட்ரீம் சேஸி உற்பத்தி முறையை உபயோகபடுத்தியுள்ளார். ஆனால், கிளாஸ் ஃபைபருக்கு பதிலாக, கார்பன் ஃபைபரை பயண்படுத்தியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

டொயோட்டா நிறுவனத்தின் முன்னாள்-வடிவமைப்பாளராக இருந்த டேஃஜி நகாயா தலைமையிலான குழு தான் இந்த காருக்கான வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு யமாஹா மோட்டர்சைக்கிள்களை அடிப்படையாக கொண்டுள்ளது என டேஃஜி நகாயா தெரிவிக்கின்றார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

யமாஹா நிறுவனம் இந்த புதிய வாகனத்தை பற்றி எந்த விதமான தகவல்களையும் வெளியிடவில்லை. 2013-ஆம் ஆண்டில் டோக்கியோ மோட்டர் ஷோவில் காட்சிபடுத்தப்பட்ட யமாஹா சிட்டி கார் கான்செப்ட்டில் பயண்படுத்தப்பட்ட 1.0 லிட்டர் 3 சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின் பயன்படுத்தபட்டது. அதன் மேம்ப்டுத்தப்பட்ட வடிவிலான இஞ்ஜின் தான், இந்த யமாஹா ஸ்போர்ட்ஸ் ரைட் கான்செப்ட் காரிலும் உபயோகிக்கப்படலாம் என தெரிகிறது.

அளவு மற்றும் எடை;

அளவு மற்றும் எடை;

யமாஹா ஸ்போர்ட்ஸ் ரைட் கான்செப்ட் கார் 3900 மில்லிமீட்டர் நீளமும், 1720 மில்லிமீட்டர் அகலமும், 1170 மில்லிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

1 டன் எடையுள்ள, 2 இருக்கைகள் கொண்ட கார்களின் உபயோகத்ததை இனி மறந்து விடலாம். யமாஹா ஸ்போர்ட்ஸ் ரைட் கான்செப்ட் கார் சுமார் 900 கிலோகிராமுக்கும் குறைவான எடையை மட்டுமே கொண்டுள்ளதாக இருக்கலாம்.

எக்ஸ்டீரியர், இண்டீரியர்;

எக்ஸ்டீரியர், இண்டீரியர்;

எக்ஸ்டீரியர் (வெளிப்புற) அமைப்பை பொறுத்த வரை, டார்க் கிரே ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

இண்டீரியர் (உட்புற) அமைப்பை பொருத்த வரை, கார்பன் ஃபைபர் மற்றும் மெட்டாளிக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தையல் வேலைப்பாடுகள் முதல் உபயோகிக்கப்பட்ட வண்ணங்கள் வரை பல மாறுபட்ட அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனத்தின் எடையை குறைக்கும் விஷயத்தில் மிகுந்த கவணம் செலுத்தப்பட்டுள்ளது.

பிற படைப்புகள்;

பிற படைப்புகள்;

யமாஹா ஸ்போர்ட்ஸ் ரைட் கான்செப்ட் காரை தவிர்த்து, பல்வேறு சுவாரஸ்யமான யமஹா படைப்புகளும் காட்சி படுத்தப்பட்டன. இதனால் யமாஹாவின் அரங்கங்கள் கலைகட்டின என்றே கூறலாம்.

2, 3 சக்கர வாகனங்களில் 4 முக்கிய படைப்புகள்;

2, 3 சக்கர வாகனங்களில் 4 முக்கிய படைப்புகள்;

எல்.எம்.டபுள்யூ - எம்.டபுள்யூ.டி-9 ஏ;

எல்.எம்.டபுள்யூ - எம்.டபுள்யூ.டி-9 ஏ பைக்கானது, எல்.எம்.டபுள்யூ எனப்படும் லீனிங் மல்டி-வீல் அமைப்பை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரைடிங்-கில் இது புதிய வகை அமைப்பாகும். இந்த அமைப்பில் 2 முன் சக்கரங்களும், ஒரு பின் சக்கரமும் உள்ளது.

இது 849 சிசி, இன்-லைன், 3 சிலிண்டர் இஞ்ஜினை கொண்டுள்ளது.

மோடோபோட் வெர்ஷன்.1 ;

மோடோபோட் வெர்ஷன்.1 ;

மோடோபோட் வெர்ஷன்.1 ஹுமனாய்ட் ரோபாவால் இயக்கப்படும் தானியங்கி மோட்டார்சைக்கிள் ஆகும்.

இது யமாஹா மோட்டர்சைக்கிள் மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் சிறந்த கலவையாகும்.

ரெஸோனேட்டர் 125;

ரெஸோனேட்டர் 125;

ரெஸோனேட்டர் 125 என்ற இந்த பைக், இலகு ரக காம்பேக்ட் மோட்டர்சைக்கிளாகும்.

இது, மோட்டர்சைக்கிளை இயக்க துடிக்கும் இளைஞர்களுக்கு சிறந்த அனுபவங்களை தருவதற்கென்றே வடிவமைக்கபட்டுள்ளது. இது 125 சிசி சிங்கிள்-சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

ஒய்.பி.ஜே-எம்.டிபி கான்செப்ட்;

ஒய்.பி.ஜே-எம்.டிபி கான்செப்ட்;

ஒய்.பி.ஜே-எம்.டிபி கான்செப்ட் என்பது எலட்ரிக் பவர் உதவியுடன் இயங்கும் மவுண்டெய்ன் பைக் வகையை சார்ந்ததாகும்.

எந்த விதமான நிலப்பரப்பிளும் இயக்ககூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹை-பெர்ஃபார்மன்ஸ் (உயர் திறன் கொண்ட) பைக் மூலம், மறக்கமுடியாத அனுபவங்களை உணற முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 29, 2015, 10:30 [IST]
English summary
Yamaha, the Japanese motorcycle manufacturer has revealed its sports car concept—the Yamaha Sports Ride, at the 2015 Tokyo Motor Show. The two-seater sports car has been designed based on the iStream manufacturing system.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+