யமாஹா எம்டி-10, 2015 இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் ஷோவில் அறிமுகம்
யமாஹா நிறுவனம் தங்களின் எம்டி-10 (நேக்கட் 1 லிட்டர் பைக்) பைக்கை 2015 இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.
யமாஹா நிறுவனத்தின் இந்த புதிய படைப்பு, ஜப்பானின் இருண்ட தோற்றத்தை காண்பிப்பதாக உள்ளது.

வடிவமைப்பு;
யமாஹா எம்டி-10 பைக் (நேக்கட் 1 லிட்டர் பைக்), முழுமையாக ஃபேரிங் செய்யபட்ட யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்1 மோட்டர்சைக்கிளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.
யமாஹா எம்டி-10 பைக்கின் டிசைன் அச்சுறுத்தும் வகையிலும், எதிர்காலம் நோக்குடையதாகவும் தோன்றுகிறது.

இஞ்ஜின்;
யமாஹா எம்டி-10 பைக் (நேக்கட் 1 லிட்டர் பைக்), யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்1 மோட்டர்சைக்கிளிடம் இருந்து பெறபட்டுள்ள 998சிசி, 4 இன்லைன் சிலிண்டர்கள் உடைய லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் கிராஸ்பிளேன் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

செக்மண்ட் வகையில் முதன்மையான அறிமுகங்கள்;
யமாஹா எம்டி-10 பைக் (நேக்கட் 1 லிட்டர் பைக்), செக்மண்ட் வகையில் பல்வேறு முதல் முறை அம்சங்களை கொண்டு, இஞ்ஜினியர்கள் இதனை வடிவமைத்துள்ளனர்.
இந்த எம்டி-10 பைக்கில், யமாஹா சிப் கண்ட்ரோல்ட் (கட்டுபடுத்தபட்ட) த்ராட்டல், யமாஹா டி-மோட், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், அசிஸ்ட் அண்ட் ஸ்லிப்பர் கிள்ட்ச் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு முதன்மையான அம்சங்கள் உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் உள்ளது.

எடை;
எம்டி-10 பைக்கின், எடை அம்சத்தை பொருத்த வரை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடைகுறைந்த மற்றும் வேகமாக இயங்கும் வாகனமாக யமாஹா வடிவமைப்பாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.

அறிமுக விவரம்;
இந்த யமாஹா எம்டி-10, முதலில் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யபட உள்ளது.
அதன் பின்னர், வேறு பல சந்தைகளில் அறிமுகம் செய்ய திட்டமிட பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம்;
யமாஹா எம்டி-10 பைக், இந்தியாவில் அறிமுகம் செய்யபடுவது குறித்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
எனினும், இந்த யமாஹா எம்டி-10 பைக் (நேக்கட் 1 லிட்டர் பைக்), 2016-ஆம் ஆண்டு இறுதியில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.

விலை;
விலையை பொருத்த வரை எந்த விதமான தெளிவான தகவகளும் வெளியிடப்படவில்லை.
எனினும், யமாஹா எம்டி-10 பைக்கின் (நேக்கட் 1 லிட்டர் பைக்) விலை, யமாஹா ஒய்இசட்எஃப்-ஆர்1 சூப்பர்பைக்கை காட்டிலும் சற்று விலை குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ;
இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ 2015, இத்தாலியில் உள்ள மிலானோ என்ற நகரத்தில், நவம்பர் 19, 2015 முதல் நவம்பர் 22, 2015 தேதி வரை நடைபெற உள்ளது.
இது உலக அளவில் இரு சக்கர வாகனங்களுக்காக பிரத்யேகமாக நடத்தபடும் மோட்டார் ஷோ என்பது குறிப்பிடதக்கதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது.
யமாஹா எம்டி-10 பைக்கின் வீடியோ;
யமாஹா எம்டி-10 பைக்கின் (நேக்கட் 1 லிட்டர் பைக்) வீடியோ உங்கள் பார்வைக்கு வழங்கபடுகிறது.


Click it and Unblock the Notifications








