இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில், யமஹா டபுள்யூ ஆர்450எஃப் எண்ட்யூரோ அறிமுகம்

By Ravichandran

யமாஹா நிறுவனம், தங்களின் டபுள்யூ ஆர்450எஃப் எண்ட்யூரோ மோட்டார்சைக்கிளை இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன், டபுள்யூஆர்450எஃப் பைக்கும் காட்சிபடுத்தபட்டது.

டபுள்யூஆர்450எஃப் எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள் யமாஹாவின் ஒய்இசட்450எஃப் பைக்கை அடிப்படையாக கொண்டுள்ளது. ஒய்இசட்450எஃப் பைக் 2015 எம்எக்ஸ்ஜிபி வேர்ல்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் வென்றது என்பது குறிப்பிடதக்கது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

யமாஹாவின் டபுள்யூஆர்450எஃப் எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், சாய்வான பின்னோக்கிய சிலிண்டர் கொண்ட புதிய ரிவர்ஸ் சிலிண்டர் ஹெட் கொண்டுள்ளது.

இது 449 சிசி, சிங்கிள்-சிலிண்டர் லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் ஃப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் இணைக்கபட்டுள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

யமாஹா டபுள்யூஆர்450எஃப் எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், புதிய அலுமினியம் பைலேட்டரல் ஃபிரேம், புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

மேலும், இதில் கேஒய்பி அட்ஜெஸ்டபல் சஸ்பென்ஷன், டெம்பரேச்சர் ரெகுலேட்டிங் ரேடியேட்டர் ஃபேன், ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

முக்கிய பயனர்கள்,

முக்கிய பயனர்கள்,

இந்த யமாஹா டபுள்யூஆர்450எஃப் எண்ட்யூரோ, முக்கியமாக பொழுதுபோக்கு ரைடர்கள், எண்ட்யூரோ பந்தய வீரர்கள், மற்றும் ரேலி ரைடர்களுக்காக உருவாக்கபட்டுள்ளது.

ஆன்- ரோட் (சாலைகளில்) மற்றும் ஆஃப் ரோட்களில், அதிகப்படியான திறனை வழங்கும் வகையில், இதன் இஞ்ஜின் மற்றும் சேஸி வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த பைக் எடை குறைந்ததாகவும், துறுதுறுவென இருப்பதுடன் அதிகபடியான ரைடிங் இன்பம் வழங்கும் வகையில் இருக்கும் என யமஹா தெரிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

யமாஹா டபுள்யூ ஆர்450எஃப் எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், இஞ்ஜின் வார்னிங் மற்றும் ஃப்யூவல் வார்னிங் வழங்கும் வகையிலான எண்ட்யூரோ கம்ப்யூட்டர் கொண்டுள்ளது.

இதில், ஸ்டாண்டர்ட் மோட் மற்றும் ரேஸ் மோட் என்ற பெயர்களில் மொத்தம் இரண்டு மோட்கள் உள்ளன.

ஸ்டாண்டர்ட் மோட்;

ஸ்டாண்டர்ட் மோட், வேகம், ட்ரிப் மீட்டர் மற்றும் கடிகாரத்தை காட்டுகின்றது.

ரேஸ் மோட்;

ரேஸ் மோட், சராசரி ஸ்பீட், ரேஸ் டைம் மற்றும் ட்ரிப் ஃப்ங்க்‌ஷனாளிட்டி உள்ளிட்டவற்றை காட்டுகின்றது.

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ;

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ;

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ 2015, உலக அளவில் இரு சக்கர வாகனங்களுக்காக பிரத்யேகமாக நடத்தபடும் மோட்டார் ஷோ ஆகும்.

இது, இத்தாலியின் மிலானோ நகரத்தில், நவம்பர் 19 முதல் நவம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 20, 2015, 8:30 [IST]
English summary
Yamaha unveiled their new WR450F Enduro motorcycle, in the ongoing 2015 EICMA Motor Show. This motorcycle is based on Yamaha's YZ450F, which won the 2015 MXGP World Championship.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+