புதிய டாடா டிகோர் காரின் அறிமுக தேதி அறிவிப்பு!

இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் டாடா டிகோர் வரும் 29ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By Azhagar

ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள டாடா டிகோர் வரும் மார்ச் 29ம் தேதி இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. தயாரிப்பு நிலை மாடல் வெளியானபோதே பரபரப்பை ஏற்படுத்திய டாடா டிகோர், விற்பனைக்கு வந்தால் நிச்சயம் சாதனை படைக்கும் என்றே கணக்கிடப்பட்டு வருகிறது.

மார்ச் 29ல் விற்பனைக்கு வரும் டாடா டிகோர்

ஜெனிவாவில் எடிசன் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த காரின் முன்புறத்தில் டாடா டியாகோவிலிருந்த முகப்பு க்ரில் அமைப்பு, நடுவில் டாடா மோட்டார்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மார்ச் 29ல் விற்பனைக்கு வரும் டாடா டிகோர்

டாடா மோட்டார்ஸ் தயாரித்திருந்த ஹேட்ச்பேக் காரான டியாகோவின் சில அமைப்புகளை பெற்றுள்ள டிகோர், அடிப்படையிலே உருவாக்கப்பட்ட இம்பேக்ட் டிசைன்களையும் கொண்டுள்ளது. மேலும், செடான் ரக கார்களுக்கு உரித்தான பூட் டிசைன் அமைக்கப்பட்டுள்ளதால் டாடா மோட்டார்ஸ் டிகோர் காரை ஸ்டைல்பேக் என அழைக்கின்றது.

மார்ச் 29ல் விற்பனைக்கு வரும் டாடா டிகோர்

புதிய டாடா டிகோர் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோலில் இயங்கும் இந்த எஞ்சின், அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 வேக மெனுவில் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்காக டாடா டிகோர் 1.05 லிட்டர் டீசல் எஞ்சினிலும் வர இருக்கிறது.

மார்ச் 29ல் விற்பனைக்கு வரும் டாடா டிகோர்

டாடா டியகோவிலும் இதே எஞ்சின்கள் தான் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதனால் செயல்பாடுகளை பொருத்தவரை டாடா டிகோர், டியோகோ போன்று தான் இருக்கும் என்பது பல ஆட்டோமொபைல் வல்லுநர்களின் கருத்து. இன்டீரியரிலும் அதிக வித்தியாசங்கள் இருக்காது.

மார்ச் 29ல் விற்பனைக்கு வரும் டாடா டிகோர்

டாடா டிகோர், டாடா இண்டிகோ காருக்கான மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4 மீட்டருக்கும் குறைவாக தயாரிக்கப்பட்டுயிருப்பதால் டிகோருக்கான வரி விதிப்பு குறைவாக இருக்கும். இதனால், மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே டிகோரின் விற்பனை அதிகரிக்க வாய்புள்ளது.

மார்ச் 29ல் விற்பனைக்கு வரும் டாடா டிகோர்

அதேபோல் தற்போது சந்தையில் முன்னிலையில் உள்ள ஃபோர்டு ஆஸ்ஃபையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸெண்ட், ஸ்விஃப்ட் டிசைர் ஆகிய கார்களின் விற்பனையும் டாடா டிகோர் வருகையால் நெருக்கடி ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 29ல் விற்பனைக்கு வரும் டாடா டிகோர்

புக்கிங் தேதி அறிவிப்பதற்கு முன்னரே, டியோகோவின் விற்பனை தேதியை டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது, இதனால் லோக்கல் டீலர்கள் காரை புக்கிங் செய்வார்கள், அவர்களை தொடர்பு கொண்டு மார்ச் 29ம் தேதி வரை காத்திருக்காமல், காரை வாஙக் விரும்புவோர் இப்பொழுதே டாடா டிகோரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.4.5 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டாடா டிகோர் கார் எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டலாக தயாராகியிருக்கும் புதிய டாடா ரேஸ்மோ காரின் படங்களை கீழே உள்ள தொகுப்பில் பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Tata Motors has revealed the launch date of its much awaited subcompact sedan, the Tigor. The new car will be launched in India on March 29, 2017
Story first published: Thursday, March 9, 2017, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X