புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை அறிமுகம் செய்தது யமஹா!

டோக்கியோவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

By Saravana Rajan

புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி இருக்கிறது. அந்த வகையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், புதிய மூன்று சக்கர பைக் மாடலை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை அறிமுகம் செய்தது யமஹா!

யமஹா நிறுவனத்தின் பிரபலமான எம்டி-09 பைக் அடிப்படையில், இந்த புதிய மூன்றுசக்கர பைக் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் இரண்டு சக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், வளைவுகளில் அதிக நிலைத்தன்மையுடன் இந்த பைக் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை அறிமுகம் செய்தது யமஹா!

இந்த பைக்கை லீனிங் மல்டி-வீலர்[LMW] என்ற ரகத்தில் யமஹா குறிப்பிடுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த பைக்கின் டிசைன் மிகவும் வசீகரமாக இருக்கிறது. நிகேன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பைக்கில் முன்புறத்தில் 15 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரங்கள் தனித்தனி சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றிருக்கிறது.

புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை அறிமுகம் செய்தது யமஹா!

முன்புறத்தில் இரட்டை ஹெட்லைட் அஅமைப்பும், விண்ட் ஸ்கிரீன் கொண்ட கவுல் அமைப்பின் டிசைனும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை அறிமுகம் செய்தது யமஹா!

யமஹா நிகேன் மூன்றுசக்கர வாகனத்தில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், எஞ்சினின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப தகவல்கள் அடுத்த மாதம் 6ந் தேதி இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ ஆட்டோ ஷோவில் வெளியிடப்பட உள்ளது.

புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை அறிமுகம் செய்தது யமஹா!

முன்புறத்தில் இரண்டு சக்கரங்கள் கொண்ட இந்த பைக்கின் தொழில்நுட்பம் மிகவும் தனித்துவமும், சிறப்பும் வாய்ந்தது. வளைவுகளில் பைக் திரும்பும்போது அதிக தரைப் பிடிப்பையும், நிலைத்தன்மையையும் பைக்கிற்கு வழங்கும். முன்னால் இருக்கும் இரண்டு சக்கரங்களும் தனித்தனியாக இயங்கும் என்பதும் இதன் சிறப்பு.

Trending On DriveSpark Tamil:

புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை அறிமுகம் செய்தது யமஹா!

இதுபோன்ற மூன்று சக்கர பைக் மாடல் என்பது ஆட்டோமொபைல் உலகிற்கு புதிதல்ல. ஏற்கனவே, பியாஜியோ நிறுவனம் எம்பி3 என்ற மூன்றுசக்கர பைக் மாடலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை அறிமுகம் செய்தது யமஹா!

இந்த மூன்று சக்கர பைக்கை உற்பத்திக்கு செல்ல இருப்பதை யமஹா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுமையான மூன்றுசக்கர பைக் மாடலை அறிமுகம் செய்தது யமஹா!

இந்தியாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாக கருதப்படுகிறது. ஒருவேளை, அறிமுகம் செய்யப்பட்டால், அது நிச்சயம் தனித்துவமான பைக் மாடலாக இந்திய சாலைகளை அலங்கரிக்கும்.

Trending On DriveSpark Tamil:

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha #flashback 2017
English summary
Yamaha Niken Tilting Three-wheeler Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X