ஹாலிவுட் படம் எல்லாம் தோற்று போகும்!! கஷ்டப்பட்டு திருடி கடைசியில் இப்படியா நடக்கனும்...
லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்கு பொருட்களை பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக்கில் சிலர் திருடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் (Fast & Furious) படங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அமைந்துள்ள இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் திரைப்படங்களை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். முழுக்க, முழுக்க ஆக்ஷன் படமாக எடுக்கப்படும் ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் திரைப்படங்களில் கார் & பைக்குகள் முக்கிய பங்கு வகிப்பது வழக்கம். முக்கியமாக, கார் சேசிங், கார் பந்தயங்கள் என அதிவேகமான கார்களை கொண்டு நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும்.

இதனாலேயே ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் படங்களில் நடப்பது போன்று நிஜ உலகில் நடக்குமா என கேட்டால், பெரும்பாலான விஷயங்கள் நடக்காது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு சில காட்சிகள் நம்ப முடியாத அளவிற்கு உள்ளன. ஆனால், நம் இந்தியர்களால் முடியாதது எதாவது உள்ளதா...
அந்த வகையில், லாரியில் எடுத்து செல்லப்பட்ட சரக்கு பொருளை பல்சர் பைக்கில் சென்று சிலர் திருடும் வீடியோவை இணையத்தில் கடந்த சில நாட்களாக பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோவில், லாரியின் மேலே இருக்கும் இருவர் உள்ளே இருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு பண்டலை வெளியே எடுத்து சாலையில் போடுகின்றனர். இதில் அந்த பொருட்கள் சாலையில் சிதறி விழுக்கின்றன. பின்னர், லாரியின் பின்னால் பைக்கில் வரும் நபருடன் சேர்ந்து அங்கிருந்து தப்பித்து விடுகின்றனர்.

இந்த காட்சிகள் யாவும், லாரிக்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்களால் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோவின் இறுதியில், லாரி டிரைவரை எச்சரிக்கும் வகையில் காரில் வந்தவர்கள் ஹார்ன் அடிப்பதை கேட்க முடிகிறது. ஆனால், திருட்டு குறித்து லாரி டிரைவரிடம் தெரிவிக்கப்பட்டதாக என்பது தெரியவில்லை.
இந்த செயல் முற்றிலும் ஆபத்தானது ஆகும். பைக்கில் இருந்து இருவர் எவ்வாறு லாரி மீது சென்றனர் என்பது வீடியோவில் காட்டப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், லாரியில் இருந்து எவ்வாறு பைக்கிற்கு வந்தார்களோ அதுபோன்றே பைக்கில் இருந்து லாரிக்கும் சென்றிருக்க வேண்டும். லாரியில் இருந்து பைக்கிற்கு மாறும்போது பைக் குலுங்குவதையும், பைக்கை ஓட்டுபவர் கொஞ்சம் தடுமாறுவதையும் காணலாம்.

பைக்கில் இருந்து லாரிக்கு செல்வதும் இதேபோன்று அபாயகரமானதாகவே இருந்திருக்க வேண்டும். இந்த சம்பவம் நடந்தது எங்கு என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. இந்திய நெடுஞ்சாலை ஒன்றில் நடந்துள்ளது என்பது மட்டும் உறுதி. திருடப்பட்ட லாரி முழுவதுமாக துணியால் கவர் செய்யப்பட்டு இருந்ததை வீடியோவில் காணலாம். அந்த துணியை கிழித்து பொருளை திருடி சென்றுள்ளனர்.
லாரி மீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் கயிறை பயன்படுத்தியுள்ளனர். இந்த செயலில் ஈடுப்பட்டுள்ள திருடர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் போல் தெரிகின்றனர். ஏனெனில், பைக்கில் இருந்து ஓடும் லாரியின் மீது ஏறி இறங்குவது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. வீடியோவை காட்சிப்படுத்தியவர்களின் கார் லாரியில் இருந்து போதுவான தொலைவில் சென்றுள்ளது. வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் லாரிக்கு அருகில் சென்றால் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழில் வெளிவந்த நெடுஞ்சாலை திரைப்படத்தில் இதேபோன்று ஓடும் லாரியில் திருடுவதை பார்த்திருப்பீர்கள். இத்தகையவர்கள் கால, காலமாக இதே செயலில் ஈடுப்படுவதால், இந்த விஷயத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால், இத்தகைய செயல்களில் ஆட்டோமொபைல் வாகனங்களை உபயோகப்படுத்துவதுதான் வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications









