இந்திய 2-வீலர் கம்பெனி எல்லாம் ஒரு முடிவோட தான் இருக்காங்க! EICMA கண்காட்சியில் கலந்துக் கொண்டதன் சூட்சமம்!

இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இன்றுடன் (நவ.09) முடிந்த 2025 EICMA மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், சர்வதேச அரங்கில் தங்கள் தயாரிப்புகளை வெளியிட்டு, உலகளாவிய இலக்குகளையும், எலெக்ட்ரிக் மயமாக்கல் திட்டங்களையும் அறிவித்தனர். இதைவிட முக்கியமாக, உலக அரங்கில் தங்களது பலத்தை இந்திய 2-வீலர் கம்பெனிகள் காண்பித்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்நாட்டு கண்காட்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில், சமீப காலமாக இந்திய 2-வீலர் நிறுவனங்கள் இவ்வாறான சர்வதேச கண்காட்சிகளிலும் அதிகமாக பங்கேற்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில், 2025 EICMA கண்காட்சியில் பங்கேற்று இருப்பது இந்திய 2-வீலர் மார்க்கெட்டின் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

indian two-wheeler manufacturers at eicma 2025

இந்திய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் EICMA 2025 கண்காட்சியில் அதிக அளவில் பங்கேற்றதன் முதன்மைக் காரணங்கள், தங்களது உலகளாவிய இலக்குகளை வெளிப்படுத்துவது, எலெக்ட்ரிக் வாகன (EV) யுக்திகளை விரைவுபடுத்துவது மற்றும் சர்வதேச சந்தைகளை இலக்காகக் கொண்ட உயர் செயல்திறன்மிக்க தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது ஆகும்.

உலகளாவிய சந்தை விரிவாக்கம்: இந்திய உற்பத்தி நிறுவனங்களின் கவனம் தற்போது உள்நாட்டு சந்தையைத் தாண்டி வெளிநாடுகளுக்கும் விரிவடைந்துள்ளதை EICMA-இல் அதிக இந்திய 2-வீலர் நிறுவனங்கள் பங்கேற்று இருப்பதை வைத்து அறிய முடிகிறது. ஏனெனில், EICMA கண்காட்சி ஆனது முக்கியமாக ஐரோப்பா, ஆசியா மற்றும் பிற பிராந்தியங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள், டீலர்கள் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்கள் அடங்கிய உலகளாவிய பார்வையாளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை முன்வைப்பதற்கான ஒரு முக்கிய சர்வதேச தளமாக அமைகிறது.

indian two-wheeler manufacturers at eicma 2025

இது உலகச் சந்தைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பதற்கான ஒரு சமயோஜித நடவடிக்கையாகும். இதனாலேயே ஹோண்டா, சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ், ராயல் என்ஃபீல்டு போன்ற உலகளாவிய 2-வீலர் நிறுவனங்கள் வருடா வருடம் மறக்காமல் EICMA கண்காட்சியில் பங்கேற்கும் நிலையில், இந்த வருடம் முதல்முறையாக சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் பங்கேற்றது.

எலெக்ட்ரிக் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்துதல்: பல இந்திய பிராண்டுகள் தங்களது எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான தங்கள் அர்ப்பணிப்பை எடுத்துரைப்பதற்கான ஒரு முக்கிய தளமாக இந்தக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொண்டன. டிவிஎஸ் நிறுவனம் பல எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட்களையும், AR தொழில்நுட்பத்தையும் காட்சிப்படுத்தியதை பார்த்தோம்.

ராயல் என்ஃபீல்டு நகர்புற பயன்பாட்டிற்கான தனது எலெக்ட்ரிக் ஸ்க்ராம்ப்ளர் பைக் கான்செப்ட்டை காட்சிப்படுத்தியது. அதேபோல், ஹீரோ மோட்டோகார்ப் தனது விடா பிராண்ட் மூலம் புதிய எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட்களையும், நுண்ணிய போக்குவரத்து தீர்வுகளையும் காட்சிப்படுத்தியது. இந்திய 2-வீலர் நிறுவனங்களின் இந்த அணுகுமுறை ஆனது, குறிப்பாக கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளை கொண்ட ஐரோப்பிய சந்தைகளில், எதிர்கால போக்குவரத்தில் இந்த நிறுவனங்கள் நுழைவதை உறுதிப்படுத்துகிறது.

indian two-wheeler manufacturers at eicma 2025

புதிய மற்றும் உயர் செயல்திறன்மிக்க இருசக்கர வாகனங்கள் பிரிவுகளில் நுழைவது: பொதுவாக EICMA கண்காட்சி ஆனது உள்நாட்டில் விற்பனையாகும் வாகனங்களை விட வேறுபட்ட, பெரும்பாலும் உயர் செயல்திறன் கொண்ட அல்லது தனித்துவமான பிரிவுகளை இலக்காகக் கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்த உற்பத்தி நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

உதாரணத்திற்கு, டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 போன்ற செயல்திறன்மிக்க பைக்குகளை அறிமுகப்படுத்தியது. ஹீரோ ஒரு டக்கார் பதிப்பு பைக்கை காட்சிப்படுத்தியது. இவ்வாறான தயாரிப்புகளை முதலில் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்துவதன் மூலம், உலகளாவிய சந்தை ஏற்றுக்கொள்ளலை சோதித்து, அவர்கள் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தாத பிரிவுகளில் தங்கள் நம்பகத்தன்மையை 2-வீலர் நிறுவனங்கள் கட்டமைக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்நாட்டு கண்காட்சிகள் உடன் EICMA போன்ற தொலைத்தூர பிரதேசத்தில் நடக்கும் கண்காட்சியில் இந்திய 2-வீலர் நிறுவனங்கள் பங்கேற்பது, இருசக்கர வாகனத் துறையில் முக்கிய உலகளாவிய போட்டியாளர்களாக மாறுவதற்கான ஒரு முதிர்ந்த மற்றும் ஆக்ரோஷமான யுக்தியைக் குறிக்கிறது. குறிப்பாக, பல கோடி ரூபாய்கள் புரளும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் இந்திய 2-வீலர் கம்பெனிகள் நுழையும் விருப்பத்தின் வெளிப்பாடே EICMA போன்ற கண்காட்சிகளில் பங்கேற்பது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 9, 2025, 23:56 [IST]
English summary
Behind the scenes indian two wheeler manufacturers at eicma 2025 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X