இந்தியாவை பார்த்து உலகமே வாயடைத்து போன தருணம்... முதலீடுகளை கவர சூப்பரான ஐடியா!!
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி பலத்த வரவேற்பிற்கு மத்தியில் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக ஆட்டோ எக்ஸ்போ 2025 ஆனது டெல்லியின் துவார்கா பகுதியில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி துவங்கிய இந்த மோட்டார் கண்காட்சி 22ஆம் தேதி வரையில் 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
கண்காட்சியின் முதல் நாளான ஜனவரி 17ஆம் தேதியில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்பு வாகனங்களை காட்சிப்படுத்தின. இன்னும் சொல்லப்போனால், கண்காட்சியின் முதல் தினத்தை தான் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டார்க்கெட் செய்தன. குறிப்பாக, மாருதி சுஸுகி, ஹூண்டாய் போன்ற டாப் கார் நிறுவனங்களின் தயாரிப்புகளை முதல் நாளில் அதிகமாகவே பார்க்க முடிந்தது.

2 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி, பொதுவாக முதல் நாளின் காலை 8 மணியளவிலேயே துவங்கி விடுவது வழக்கம். ஆனால், இந்த முறை பிரதமர் நரேந்திர மோடியின் வருகையினால் சற்று தாமதமாக காலை 10 மணியளவில் தான் துவங்கப்பட்டது.
தாமதமாக துவங்கிய போதிலும், உடனடியாக வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்படவில்லை. பிரதமரின் உரைக்கு பின் பகல் 1 மணியளவில்தான் வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட ஆரம்பித்தன. வழக்கம்போல், மாருதி சுஸுகியின் கார்கள் தான் முதலாவதாக காட்சிக்கு நிறுத்தப்பட்டன. ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் காரான இ-விட்டாரா முதல் வாகனமாக 2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.
இ-விட்டாரா எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் விற்பனை செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. மாருதி சுஸுகியின் இ-விட்டாராவுக்கு அடுத்து ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியின் முதல் நாளில் நம்மை வசீகரித்த மற்றொரு எலக்ட்ரிக் கார் என்றால், அது ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஆகும். ரூ.17.99 லட்சத்தில் கிரெட்டா எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியார்ரா மற்றும் அவின்யா கார்களையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. டொயோட்டா நிறுவனம் அதன் அர்பன் க்ரூஸர் காரை எலக்ட்ரிக் வெர்சனில் இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது. இது, மாருதி சுஸுகி இ-விட்டாராவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா எலக்ட்ரிக் காராக விளங்குகிறது.
எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரம் காட்டிவரும் எம்ஜி மோட்டாரில் இருந்து சைபர்ஸ்டர் மற்றும் எம்9 என 2 எலக்ட்ரிக் கார்கள் ஆட்டோ எக்ஸ்போவின் முதல் நாளில் காட்சிப்படுத்தப்பட்டன. கியா நிறுவனம் அதன் இவி6 ஃபேஸ்லிஃப்ட் காரையும், கார்னிவல் ஹை லிமௌசைன் காரையும் காட்சிப்படுத்தி இருந்தது. இவை மட்டுமில்லாமல், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1, ஸ்கோடாவில் இருந்து சில கார்களும், மெர்சிடிஸ்-பென்ஸில் இருந்து பல்வேறு கார்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனத்துக்கும் இந்தியாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ ஆனது முக்கியமான கண்காட்சியாகும். குறிப்பாக, ஆட்டோ எக்ஸ்போவின் முதல் நாளில்தான் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு வாகனங்களை காட்சிப்படுத்த முயற்சிக்கும். ஏனெனில், அந்த சமயத்தில்தான் பார்வையாளர்களின் கவனம் முழுவதும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








