பிரதமர் செய்த அந்த ஒரு செயல்... மொத்த உலகமும் இப்போ இந்தியாவை தான் பார்க்குது!!

ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சி டெல்லியின் துவார்கா பகுதியில் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மோட்டார் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரில் துவங்கி வைத்தார். ஜனவரி 17ஆம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி 22ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 18) கண்காட்சியின் 2வது நாள் ஆகும்.

கண்காட்சியின் முதல் நாளை மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் இ-விட்டாரா (e-Vitata) எலக்ட்ரிக் கார் உடன் துவங்கிய நிலையில், அதன்பின் சுஸுகி மோட்டார்சைக்கிள், ஹீரோ மோட்டோகார்ப், மெர்சிடிஸ்-பென்ஸ், ஹூண்டாய, பிஎம்டபிள்யூ போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்துள்ளன.

இந்த நிலையில் கண்காட்சியின் 2வது நாளிலும் பிஎம்டபிள்யூ, அசோக் லேலண்ட், பிஒய்டி, பஜாஜ் ஆட்டோ போன்ற டாப் பிராண்ட்களின் புதிய வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கண்காட்சியின் முதல் நாள் பிரதமர் மோடியின் வருகைக்காகவும், அவரது உரைப்பேச்சுக்காகவும் சற்று தாமதமாக பகல் 1 மணிக்கு பின் துவங்கிய நிலையில், 2வது நாள் 9 மணிக்கே துவங்கவுள்ளது.

9 மணிக்கு துவங்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியின் 2வது நாளில் முதல் நிறுவனமாக வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம் அதன் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இருந்து விஎஃப்3, விஎஃப்9 மற்றும் விஎஃப்7 உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்களும், ஒரு எலக்ட்ரிக் பிக்-அப் டிரக் வாகனமும் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ளது.

bharat mobility auto expo 2025

அதனை தொடர்ந்து, பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தில் இருந்து எக்ஸ்3 காரும், மினி கூப்பர் காரும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. 10 மணிக்கு பின், அசோக் லேலண்ட், எகா மொபிலிட்டி, பிஒய்டி இந்தியா, ஜேபிஎம் ஆட்டோ, டிஐ க்ளீன் மொபிலிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்டோ எக்ஸ்போபில் பங்கேற்க உள்ளன.

பகல் 12.05 மணிக்கு முக்கியமான, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது 2-வீலர்/ 3-வீலர்களை வெளியீடு செய்ய உள்ளது. முதல் நாளில் பங்கேற்ற ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மீண்டும் 2வது நாளிலும் 12.30 மணிக்கு தனது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளது. அதனை தொடர்ந்து, பைனாக்கிள் இண்டஸ்ட்ரீஸ், நியூமர்ஸ் மோட்டார்ஸ், வாய்வே மொபிலிட்டி, எஸ்.எம்.எல் இசுஸு, கம்மின்ஸ் இந்தியா என தொடர்ச்சியாக கமர்ஷியல் வாகன நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

bharat mobility auto expo 2025

இதில், நியூமரஸ் மோட்டார்ஸ் ஆனது நேற்றைய முதல் நாளிலும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ், சார்லா அவியேஷன், மோட்டோவோல்ட் மொபிலிட்டி, ஒலெக்ட்ரா க்ரீன்டெக், ஒமேகா சேகி மொபிலிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க உள்ளன. அத்துடன், மாலை 5.30 மணியளவில் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியின் 2வது நாள் நிறைவடையும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியின் முதல் நாளை போன்று 2வது நாளிலும் வாகனங்களின் அறிமுகங்கள், வெளியீடுகள் மற்றும் காட்சியமைப்புகள் இடம்பெற உள்ளன. கண்காட்சியின் முதல் 2 நாட்களில் ஊடகவியலாளர்களும், டீலர்ஷிப் அதிகாரிகளும் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 3வது நாளில் இருந்து பொது மக்கள் அனுமதிக்கப்படுவர்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 8:59 [IST]
English summary
Bharat mobility auto expo 2025 event day 2 schedule vinfast bmw bajaj
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X