டாடா நானோ எலெக்ட்ரிக் கார் வந்தால் மட்டும் தான் இதுக்கு டஃப் கொடுக்கும்! ஹீரோ 2-வீலர் கம்பெனியின் தயாரிப்பு

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் EICMA 2025 கண்காட்சியில் தனது புதிய மைக்ரோ எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனமான 'நெக்ஸ் 3' (NEX 3)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் தனது விடா (VIDA) துணை பிராண்டின் கீழ் வரும் 'நோவஸ்' (Novus) வரிசையின் ஒரு பகுதியாக இதை வெளியிட்டுள்ளது.

நெக்ஸ் 3, ஹீரோவின் காம்பாக்ட் எலக்ட்ரிக் வாகனப் பிரிவில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஹீரோ மோட்டோகார்பின் கார் உருவாக்கும் விருப்பத்தை இது பிரதிப்பலிக்கிறது. இது ஒரு காலத்தில் டாடா நானோ வழங்கிய வசதிகளைப் போல, எதிர்கால நகரப் பயணங்களுக்கான ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

hero motocorp electric car concept

நெக்ஸ் 3 வாகனத்தில் இரண்டு பயணிகள் ஒருவருக்குப் பின் ஒருவராக அமரக்கூடிய அமைப்பு உள்ளது. இது நான்கு சக்கரங்களில் இயங்குகிறது. அனைத்து வானிலைக்கும் ஏற்ற ஒரு தனிப்பட்ட மின்சார வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நெக்ஸ் 3, சிறிய இடவசதியுடன், முழுமையான பாதுகாப்பையும் வழங்கும் வாகனமாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இது நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பயணங்களுக்கு ஏற்ற ஒரு வாகனமாக அமையும்.

இந்த வெளியீட்டின்போது பேசிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செயல் தலைவர் பவன் முஞ்சால், "நோவஸ் என்பது புதுப்பித்தல் மற்றும் மறு கண்டுபிடிப்பின் சின்னமாகும். உலகம் எவ்வாறு இயங்கும் என்பதை இது மறுபரிசீலனை செய்ய போகிறது. எதிர்காலத்தை ஊக்கமளிப்பதாகவும், புத்திசாலித்தனமாகவும், உள்ளடக்கியதாகவும் இது வடிவமைக்கப் படுகிறது" என்று தெரிவித்தார்.

hero motocorp electric car concept

மேலும், நெக்ஸ் 3 ஆனது நடைமுறைத் தன்மையையும், எதிர்கால வடிவமைப்பையும் இணைப்பதன் மூலம் இந்த தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த நெக்ஸ் 3 ஆனது தற்போதைக்கு ஒரு கான்செப்ட் மாதிரி ஆகும். அதாவது, எதிர்காலத்தில் இந்த கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

அதற்கான பணிகளில் இதன் பின்னர் ஹீரோ விடா நிறுவனம் இறங்கலாம் அல்லது ஏற்கனவே அதற்கான முதற்கட்ட வேலைகளில் இறங்கி இருக்கலாம். ஹீரோ மோட்டோகார்ப், தனது மின்சார பிராண்டான VIDA மூலம் எதிர்காலத்தில் நோவஸ் பெயரில் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. அதில் ஒன்றுதான், நெக்ஸ் 3 கான்செப்ட் மூலம் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

hero motocorp electric car concept

இது இல்லாமல், நெக்ஸ் 1 மற்றும் நெக்ஸ் 2 என்கிற கான்செப்ட் வாகனங்களையும் 2025 EICMA-இல் ஹீரோ மோட்டோகார்ப் காட்சிக்கு நிறுத்தி உள்ளது. இதில் நெக்ஸ் 1 ஆனது ஒரு கையடக்கமான, தனிப்பட்ட போக்குவரத்துக்கான, உங்களைச் சுமந்து செல்வதற்குப் பதிலாக உங்களுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

நெக்ஸ் 2 ஆனது ஒரு சிறிய, தானாக எந்த பக்கமும் சாயாத எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் ஆகும். இது மோட்டார்சைக்கிளின் உற்சாகத்தையும், நகரப் பயன்பாட்டிற்கான மூன்று சக்கரங்களின் தேவையையும் இணைக்கிறது. இவ்வாறான அட்வான்ஸ்டு வாகன கான்செப்ட்களுடன், ஹீரோவின் விடா பிரிவு இரண்டு புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்களையும் EICMA 2025 கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தியுள்ளது.

hero motocorp electric car concept

அவை விடா கான்செப்ட் உபெக்ஸ் (Concept Ubex) மற்றும் விடா புராஜெக்ட் வி.எக்ஸ்.இசட் (Project VxZ) என்பன ஆகும். இதில் புராஜெக்ட் வி.எக்ஸ்.இசட் ஆனது அமெரிக்காவின் ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது ஆகும். இது உலகளாவிய செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் நுழையும் ஹீரோவின் நோக்கத்தை காட்டுகிறது.

மேலும், ஹீரோ விடா விஎக்ஸ்2 (VX2) என்ற நகரத்திற்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. இது ஐரோப்பிய சந்தையில் ஹீரோ விடா பிராண்டின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தைக் குறிக்கிறது. இது தவிர, விடா டெர்ட்.இ (DIRT.E) ஆஃப்-ரோடு எலெக்ட்ரிக் பைக்குகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் 4 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கான டெர்ட்.இ கே3 மற்றும் உயர் செயல்திறன் கொண்ட டெர்ட்.இ எம்.எக்ஸ்7 ரேசிங் கான்செப்ட் ஆகியவை அடங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விடா நோவஸ் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் நிலையான, புத்திசாலித்தனமான மற்றும் ஒருங்கிணைந்த பயணத்தை மறுவரையறை செய்யும் முனைப்பில் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து இவ்வாறான புது, புது ஐடியாக்கள் வருவதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. இது 'வாழ்க்கை இயக்கம்' என்ற ஹீரோ பிராண்டின் தத்துவத்தால் உந்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 7, 2025, 15:56 [IST]
English summary
Hero motocorp showcased new electric car concept through vida brand at eicma 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X