கண்ணை பறிக்குது... ராயல் என்ஃபீல்டில் அதிகமா யாரும் வாங்காத பைக்கின் விற்பனை இனியாவது அதிகரிக்குமா?

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், கோவாவில் நடைபெற்றுவரும் 2025ஆம் ஆண்டிற்கான மோட்டோவர்ஸ் 2025 நிகழ்ச்சியில் மீட்டியோர் 350 (Meteor 350) பைக்கின் புதிய 'சன்டவுனர் ஆரஞ்சு' (Sundowner Orange) என்கிற சிறப்புப் பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது, மீட்டியோர் 350சிசி க்ரூஸர் பைக்கில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தப் புதிய மீட்டியோர் 350 சன்டவுனர் ஆரஞ்சு பதிப்பு பைக்கில், தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட டூரிங் கிட் மற்றும் ஒரு நினைவுப் பதக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மீட்டியோர் பைக்கின் தற்போதைய அம்சங்களை மேலும் மேம்படுத்தி, நீண்ட தூரப் பயணங்களுக்கான முழுமையான ஒரு பைக்காக இதை ராயல் என்பீல்டு வடிவமைத்துள்ளது.

royal enfield at motoverse 2025

சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2,18,882 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மீட்டியோர் குடும்பத்தில் ஒரு பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிளாக அமைந்துள்ளது. நகர்ப்புற பயணங்களை விட நெடுஞ்சாலைப் பயணங்களை விரும்புவோரைக் குறிவைத்து இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. சூரியன் மறைவின் போது நிலவும் நிறத்திலான இதன் பெயிண்ட், ராயல் என்பீல்டு மீட்டியோர் பைக்கின் அடையாளத்தை இழக்காமல் தனித்து நிற்கிறது.

நீண்ட தூர பயணங்களுக்கு வசதியாக, டீலக்ஸ் டூரிங் சீட் தரநிலையாக வழங்கப்படுகிறது. பின்பக்க இருக்கையில் பயணிப்பவர்களுக்காக, ஒரு பேக்ரெஸ்ட் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டுள்ளது. இந்த மீட்டியோர் 350 சன்டவுனர் ஆரஞ்சு பைக்கில் ஃபிளை ஸ்கிரீன் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது. இது நெடுஞ்சாலைகளில் வழக்கமான பயண வேகத்தில் காற்று வீசுவதைக் குறைத்து, நீண்ட பயணங்களின்போது சோர்வைத் தவிர்க்க உதவும்.

royal enfield at motoverse 2025

மேலும், பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் பாட் என்பதும் வழங்கப்பட்டுள்ளது. இது நீண்ட தூரப் பயணங்களுக்கான ராயல் என்பீல்டின் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒருங்கிணைந்த நேவிகேஷன் அம்சம், ராயல் என்பீல்டு பைக்குகளில் உரிமையாளர்கள் அதிகம் விரும்பும் சிறப்பம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மேலும், பிரீமியம் தரத்திலான அலுமினியம் டியூப்லெஸ் ஸ்போக் சக்கரங்கள் கிளாசிக் ஸ்போக் வடிவமைப்பையும், மாடர்ன் டியூப்லெஸ் டயர்களின் வசதியையும் இணைக்கின்றன.

ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச், போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி கியர் மாற்றும்போது லிவர் தேவையைக் குறைக்கிறது. அட்ஜெஸ்டபிள் லீவர்கள், ஓட்டுநர்கள் தங்கள் கை அளவிற்கு ஏற்ப லீவர் அடையும் தூரத்தை சரிசெய்ய உதவுகிறது. இது நீண்ட தூர பயணங்களின் போது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

royal enfield at motoverse 2025

LED ஹெட்லேம்ப்கள் சிறந்த இரவு நேரப் பார்வையை வழங்குகின்றன. USB டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட், மொபைல் போன்கள் மற்றும் பிற சிறிய சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய உதவக் கூடியதாக அமைந்துள்ளன. இந்த லிமிடெட் எடிஷன் ஒரு சிறப்பு நினைவுப் பதக்கத்தையும் கொண்டுள்ளது.

மற்றப்படி, பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. மீட்டியோர் 350 பைக்கில் 349.34சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. 191 கிலோ எடை கொண்ட இந்த 350சிசி பைக்கில் 15 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது.

royal enfield at motoverse 2025

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெரிதும் எதிர்பார்த்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்த மீட்டியோர் 350 பைக் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகுவது இல்லை என்பது அதன் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது. தற்போது 2025 மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய சன்டவுனர் ஆரஞ்சு நிற பதிப்பு இந்த பைக்கின் விற்பனையை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2025, 13:28 [IST]
English summary
Motoverse 2025 royal enfield launches meteor 350 sundowner orange edition motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X