125 ஆண்டுகால புல்லட் பைக்குகளிலேயே இது வேற ரகம்! கண்காட்சிக்கு வந்தவங்க எல்லாரும் பார்த்து மிரண்டுட்டாங்க!

இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியை தொடர்ந்து, ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தனது புல்லட் 650 (Bullet 650) பைக்கை கோவாவில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான மோட்டோவெர்ஸ் (Motoverse) நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் முதல்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், சிறிய பைக்குகளின் வழக்கமான வடிவமைப்பு அம்சங்களையும், அளவில் பெரியதான மற்றும் நம்பகமான 650சிசி தளத்தையும் இது ஒருங்கிணைக்கிறது. மேலும், புல்லட் பைக்குகளின் 125 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டாடும் விதமாக, 125ஆம் ஆண்டு சிறப்புப் பதிப்பையும் புதிய புல்லட் 650 பைக்கில் ராயல் என்பீல்டு வெளியிட்டுள்ளது.

royal enfield showcased bullet 650

புல்லட் 650 பைக்கின் வடிவமைப்பு ஆனது புல்லட் பைக்குகளுக்கே உண்டான சிறப்பம்சங்களான வட்ட வடிவ ஹெட்லேம்ப், சிறிய பைலட் விளக்குகள், கண்ணீர்த் துளி வடிவ பெட்ரோல் டேங்க் போன்றவற்றை கொண்டுள்ளது. தனித்துவமான ஸ்டைலுக்காக, பெட்ரோல் டேங்கில் கையால் வரையப்பட்ட கோடுகள், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பழைய லோகோ மற்றும் பல அம்சங்களையும் நிறுவனம் வழங்குகிறது.

இவை அனைத்தும் புதிய கலர் ஆப்ஷன்களுடன் இணைந்து பைக்கிற்கு மேலும் அழகூட்டுகின்றன. ராயல் என்பீல்டு புல்லட் 650 பைக்கின் 125ஆம் ஆண்டு சிறப்புப் பதிப்பு 'ஹைப்பர்ஷிஃப்ட்' எனப்படும் ஒரு சிறப்பு கலர் ஆப்ஷன் உடன் வருகிறது. இது ஒளியின் கோணத்தைப் பொறுத்து அடர் சிவப்பு மற்றும் பொன் நிறத்தில் தெரியும்.

royal enfield showcased bullet 650

பெட்ரோல் டேங்கில் உள்ள '125 ஆண்டுகள்' லோகோ இந்த பதிப்பின் முக்கிய அம்சமாகும். கிளாசிக் 650 125ஆம் ஆண்டு பதிப்பு மோட்டார்சைக்கிளின் பக்கவாட்டு பேனல்களிலும் இதே லோகோக்கள் இடம்பெற்றுள்ளன. பளபளப்பான பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு பேனல்கள் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து, பைக்கின் மற்ற பகுதிகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

என்ஜின் கேசிங்குகள், எக்ஸாஸ்ட் குழாய்கள், ஒயர்-ஸ்போக் சக்கரங்கள், ஃபிரேம், ஹேண்டில்பார்ஸ், ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லைட்டை சுற்றிலும் கருப்பு நிறம் உள்ளன. இந்த தைரியமான ஸ்டைல் புதிய புல்லட் 650 பைக்கிற்கு நவீன தோற்றத்தை அளிக்கிறது. என்ஜின் விவரங்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே விற்பனையில் உள்ள கிளாசிக் 650 பைக்கில் உள்ள 648சிசி ஏர்-கூல்டு பேரலல்-ட்வின் என்ஜின் தான் புதிய புல்லட் 650 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.

royal enfield showcased bullet 650

இந்த 650சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 46 ஹெச்பி ஆற்றலையும், 5,650 ஆர்பிஎம்-இல் 52 என்எம் பீக் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. வடிவமைப்புடன் சேர்ந்து, இது பைக்கின் தனித்துவமான தன்மையை பாதுகாக்கிறது.

புல்லட் 650, ராயல் என்பீல்டின் மற்ற 650சிசி பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே இரும்பு குழாய் ஸ்பைன் ஃபிரேமை அடிப்படையாகக் கொண்டது ஆகும். கிளாசிக் 650 பைக்கைப் போலவே, புல்லட் 650 பைக்கிலும் முன்பக்கத்தில் 43மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக்குகளும் சஸ்பென்ஷன் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளன. இது 19-இன்ச் முன் சக்கரத்தையும், 18-இன்ச் பின் சக்கரத்தையும் கொண்டுள்ளது.

royal enfield showcased bullet 650

பிரேக்கிங்கிற்கு, ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. முன் சக்கரத்தில் ட்வின்-பிஸ்டன் காலிப்பர் உடன் 310மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிப்பர் உடன் 300மிமீ டிஸ்க்கும் உள்ளது. தரையில் இருந்து இந்த பைக் 800மிமீ உயரத்தில் ரைடர் இருக்கையையும், 243 கிலோ எடையையும் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக்கை போலவே புதிய புல்லட் 650 பைக்கும் அதன் ஸ்டைலான தோற்றத்தினால் 2025 மோட்டோவெர்ஸ் கண்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்க கூடியதாக உள்ளது. குறிப்பாக, தனித்துவமான கலர் ஆப்ஷன்கள் இந்த பைக்கின் முக்கியமான கவர்ச்சிக்கரமான அம்சமாக அமைகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2025, 19:00 [IST]
English summary
Motoverse 2025 royal enfield showcased bullet 650 motorcycle in india for first time
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X