இதற்கு அப்புறம் ராயல் என்ஃபீல்டின் ரேஞ்ச் எங்கேயோ போக போகுது! 2026இல் தெரிந்துவிடும்!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் கான்டினென்டல் ஜிடி750 (Continental GT750) பந்தய பைக்கின் முன்மாதிரியை, கோவாவில் நடைபெற்றுவரும் மோட்டோவெர்ஸ் 2025 (Motoverse 2025) நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. சமீபத்தில், சர்வதேச அளவில் இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் முதல்முறையாக தற்போது இந்த கான்செப்ட் பைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ஜிடி750 முன்மாதிரி ஆனது ராயல் என்ஃபீல்டின் புதிய 750சிசி பிளாட்ஃபார்மின் முன்னோட்டமாகும். தற்போது விற்பனையில் உள்ள கான்டினென்டல் ஜிடி650 பைக்கிற்குப் பதிலாக வருகிற 2026ஆம் ஆண்டில் இந்த பைக் களமிறக்கப்பட உள்ளது. காட்சி ரீதியாக, ராயல் என்ஃபீல்டு ஜிடி750 ஆனது ரெட்ரோ-ரேசர் மோட்டார்சைக்கிள் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

royal enfield at motoverse 2025

குறைவான பாடி பேனல்கள், சிறிய கிளிப்-ஆன் ஹேண்டில்பார்கள், பின்னோக்கி அமைக்கப்பட்ட ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி மற்றும் சுருக்கப்பட்ட சப்-ஃப்ரேம் ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்களாகும். இவை பைக்கின் கச்சிதமான மற்றும் விரைவான இயக்கத்தை உறுதி செய்கின்றன. பின்புறத்தில், இரண்டு-பட்டையாக எல்இடி விளக்குகள் பைக்கின் வால் பகுதியின் முழு அகலத்திற்கும் நீள்கின்றன.

இந்த கான்செப்ட் பைக்கின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள பந்தய எண் தகடுகள் ஆனது இந்த கான்ப்செட்டில் இருந்து உருவாக்கப்படும் பைக் பந்தயங்களுக்கும் பயன்படுத்தக்கூடியது என்பதை வெளிப்படுத்துகின்றன. புதிதாக வடிவமைக்கப்பட்ட சேசிஸ் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஸ்டீயரிங் அசெம்பிளி ஆகியவை ராயல் என்ஃபீல்டு ஜிடி750 பைக் முன்மாதிரியின் சிறப்பம்சங்களாகும். பந்தயச் சூழல்களுக்காகவே இந்த பைக்கில் தேவைக்கேற்ப அட்ஜெஸ் செய்யக்கூடிய ஷோவா நிறுவனத்தின் சஸ்பென்ஷன் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

royal enfield at motoverse 2025

முன்புறத்தில் உறுதியான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பைக்கின் மேம்பட்ட இயக்கவியலுக்கு ஏற்றவாறு, பிரேக்கிங் அமைப்பும் மேம்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. இரட்டை முன் டிஸ்க்குகள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட காலிப்பர்கள் இதில் அடங்கும். காண்டினெண்டல் ஜிடி750 பைக்கின் முற்றிலும் புதிய 750சிசி பேரலல்-ட்வின் என்ஜின், தற்போதுள்ள 648சிசி என்ஜினை விட அதிக சக்தியை வழங்குகிறது.

பந்தயத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 54- 55 பிஎச்பி மற்றும் 65 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் என ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது ஜிடி650 பைக்கின் 47 பிஎச்பி/52 என்.எம் டார்க் திறனை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். தற்போதைய 650சிசி பைக்குகளில் உள்ள 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர்-கிளட்ச் அமைப்பு இந்த புதிய பைக்கிலும் தொடர வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பந்தயங்களுக்கு ஏற்ப உருவாக்கப்படும் புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி750 பைக்கிற்கான இந்த முன்மாதிரியின் இரட்டை டிஸ்க் பிரேக்குகள், மாற்றியமைக்கப்பட்ட வடிவியல் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஹார்ட்வேர்ஸ் ஆகியவை ராயல் என்பீல்டு நிறுவனம் உயர் செயல்திறன் கொண்ட நியோ-ரெட்ரோ பைக்குகள் நோக்கி நகர்வதைக் காட்டுகிறது.

royal enfield at motoverse 2025

இந்த பைக்கை உருவாக்க பயன்படுத்தவுள்ள புதிய பிளாட்ஃபார்ம் சாலைப் பயன்பாட்டிற்கான பைக்குகளையும், பந்தயப் பயன்பாட்டிற்கான பைக்குகளையும் உருவாக்க ஏற்றதாக இருக்கும் என ராயல் என்பீல்டு எதிர்பார்க்கிறது. இதன் மூலம், இந்த நிறுவனத்தின் 750சிசி பைக்குகள் வரிசை மேலும் விரிவடையும்.

இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பைக்கின் செயல்திறன் மதிப்புகள் தற்காலிகமானவை/ மாறக்கூடியவை மற்றும் பந்தயப் பயன்பாட்டிற்காகவே வடிவமைக்கப்பட்டவை என்றாலும், பொது விற்பனைக்கு வரும் இந்த ராயல் என்ஃபீல்டு ஜிடி750 முன்மாதிரியின் உற்பத்தி பதிப்பு தோற்றத்தில் எவ்வாறு இருக்கும் என்பதற்கு தற்போது 2025 மோட்டோவெர்ஸில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ள இந்த கான்செப்ட் வாகனம் ஓர் பிரதிப்பலிப்பாகும்.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி750 உற்பத்தி பதிப்பு 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2027ஆம் ஆண்டின் முற்பகுதியிலோ அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தோராயமான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4 லட்சம் ஆக இருக்கலாம். எப்படியிருந்தாலும் தற்போதைய கான்டினென்டல் ஜிடி650 பைக்கை விட சற்று அதிகமாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2025, 22:59 [IST]
English summary
Motoverse 2025 royal enfield showcased continental gt750 race bike prototype
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X