127 வருட பழைய பைக் கம்பெனியை இந்தியா கொண்டுவரும் டிவிஎஸ்! சொன்ன மாதிரியே சாதிச்சு காட்டிடுச்சு!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) ஆதரவு பெற்ற பிரிட்டிஷ் பிராண்டான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Norton Motorcycles), நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களுடன் சந்தைக்கு மீண்டும் வந்துள்ளது. இதில் வி4 என்ஜின் கொண்ட 'மேன்க்ஸ்' (Manx) மோட்டார்சைக்கிள்கள் முதன்மை வகிக்கின்றன. மேலும், 'அட்லஸ்' (Atlas) என்கிற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களும் நடுத்தர எடைப் பிரிவில் 585சிசி பேரலல்-ட்வின் என்ஜின்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தவும் நார்டன் திட்டமிட்டுள்ளது. இவை பேரலல்-ட்வின் என்ஜின்களுடன் கூடிய நகர்ப்புற ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2025 EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள நார்டன் மேன்க்ஸ் பைக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட 1200சிசி வி4 லிக்யுடு-கூல்டு என்ஜின் உள்ளது.

norton motorcycles at eicma 2025

இந்த சூப்பர்பைக் சந்தையில் நார்டன் பிராண்டை நிலைநிறுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 11,500 ஆர்பிஎம்-இல் 206 எச்பி சக்தியையும், 9,000 ஆர்பிஎம்-இல் 128 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் குயிக் ஷிஃப்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய சேசிஸில் ஒற்றை வார்ப்பு சட்டகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மேன்க்ஸ் பைக்கில் 17 அங்குல கார்பன் ஃபைபர் சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த சக்கரங்களில் பைரெல்லி டியாப்லோ சூப்பர்கோர்ஸா வி4 எஸ்பி (Pirelli Diablo Supercorsa V4SP) டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் மொத்த எடை (பெட்ரோல் இல்லாமல்) 204 கிலோ ஆகும்.

norton motorcycles at eicma 2025

மறுப்பக்கம், மேன்க்ஸ் பைக்கின் நேக்கட் வேரியண்ட் அதிக முரட்டுத்தனமான ஸ்டீயரிங் கோணத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளது. நார்டன் மேன்க்ஸ் ஆர் என அழைக்கப்படும் இந்த பைக்கில் 43மிமீ மார்சோச்சி யுஎஸ்டி ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் ஒரு மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. இவை எலக்ட்ரானிக் முறையில் சரிசெய்யக்கூடிய கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்ட் டாம்ப்பிங் வசதியுடன் வருகின்றன.

ஓட்டுநர் பைக்கை ஓட்டும்போது வெவ்வேறு சாலை நிலைகளுக்கு ஏற்ப சஸ்பென்ஷன் அமைப்பை மாற்றும் வாய்ப்பை நார்டன் நிறுவனம் வழங்குகிறது. பிரேக்கிங் அமைப்புக்கு, முன் சக்கரத்தில் பிரேம்போ ஹைப்பியூர் மோனோப்ளாக் காலிப்பர்கள் உடன் 330மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 245மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டு உள்ளன.

norton motorcycles at eicma 2025

தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் 8 அங்குல TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை உள்ளது. ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரை மூலம் ரைட் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் சப்போர்ட் போன்ற எலக்ட்ரானிக் உதவிகளை பெறலாம்.

மேலும், கீலெஸ் இக்னிஷன், ஹீடட் கிரிப்ஸ், பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய ரன்னிங் லைட்ஸ் மற்றும் லைவ் ட்ராக்கிங் போன்ற அம்சங்களும் நார்டன் மேன்க்ஸ் ஆர் பைக்கில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், மேன்க்ஸ் மோட்டார்சைக்கிள்களுடன் அட்லஸ் மற்றும் அட்லஸ் ஜிடி பைக்குகளும் 2025 EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

norton motorcycles at eicma 2025

நடுத்தர எடை கொண்ட அட்லஸ் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்கள் 585சிசி பேரலல்-ட்வின் என்ஜினைப் பயன்படுத்துகின்றன. இந்த பைக் குறித்த விரிவான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த பைக் ஸ்போக் சக்கரங்களுடன் கிடைக்கும் என்பதையும், விருப்பமாக காஸ்ட் சக்கரங்களையும் தேர்வு செய்யலாம் என்பதையும் நார்டன் தெரிவித்துள்ளது.

மேலும், புரோஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள், 8 அங்குல டச் ஸ்கிரீன் TFT திரை, ரைடர் உதவிகள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களும் நார்டன் அட்லஸ் பைக்குகளில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன், மேன்க்ஸ் பைக்குகளில் வழங்கப்பட்டுள்ளதை போன்று, கீலெஸ் இக்னிஷன், ஹீடட் கிரிப்ஸ் மற்றும் ஹீடட் சீட்கள் ஆகியவையும் அட்லஸ் பைக்குகளின் அம்சப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி நமது தமிழ்நாட்டின் டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் அதனை சொந்தமாக்கி கொண்டுள்ளது. இருப்பினும், தற்போது EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள நார்டன் பைக்குகள் தற்போதைக்கு இங்கிலாந்தில் மேனுவலாக உருவாக்கப்பட்டு இருந்தாலும், வரும் ஆண்டுகளில் அவை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் போது ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 22:57 [IST]
English summary
Norton showcased manx and atlas motorcycles at eicma 2025 check all details here
மேலும்... #norton #eicma
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X