முதல் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் பார்க்க இப்படித்தான் இருக்குமா? விலையை சீக்கிரம் சொல்லுங்கப்பா!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான ஃப்ளையிங் ஃபிளே எஸ்6 (Flying Flea S6) என்கிற ஸ்க்ராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிள், இத்தாலி நாட்டில் மிலான் பகுதியில் நடைபெற்றுவரும் 2025ஆம் ஆண்டிற்கான EICMA கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக, எஃப்.எஃப் எஸ்6 (FF S6) என அழைக்கப்படும் ராயல் என்ஃபீல்டின் இந்த முதல் எலெக்ட்ரிக் பைக்கை பற்றிய விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நகர்ப்புற பயன்பாட்டிற்கும், வார இறுதி அட்வென்ச்சர் பயணங்களுக்கும் ஏற்ற வடிவமைப்பில் புதிய ராயல் என்ஃபீல்டு எஃப்.எஃப் எஸ்6 உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த எடையும், கடினமான சாலைகளில் பயணம் செய்யும் திறனும் கொண்டுள்ளதால் 'சிட்டி+ எக்ஸ்புளோரர்' (city+ explorer) என்று இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் வர்ணிக்கிறது. 2026ஆம் ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வரும் இந்த பைக், இந்தியாவில் அறிமுகமாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

royal enfield flying flea s6 unveiled

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள், ஒரு ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கான அடையாளங்களை தெளிவாகக் காட்டுகின்றன. யுஎஸ்டி சஸ்பென்ஷன் ஃபோர்க், செயின் டிரைவ் மற்றும் 19 அங்குல முன், 18 அங்குல பின் சக்கரங்கள் கொண்ட அமைப்பு இந்த புதிய ஃபிளையிங் ஃபிளே எஸ்6 பைக்கிற்கு உண்மையான ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்தைத் தருகின்றன.

நீளமான சஸ்பென்ஷன் அமைப்பு பல்வேறு நிலப்பரப்புகளில் பைக்கை ஓட்ட உதவும் நிலையில், எண்டூரோ-பைக்-ஸ்டைல் இருக்கை சீரான எடையையும், ஹேண்ட்லிங்கையும் வழங்கக்கூடியதாக உள்ளது. ஆஃப்-ரோடு மோடில் டூயல்-சேனல் ஏபிஎஸ் இடம்பெற்றுள்ளது. இதைத் தேவைக்கேற்ப முழுவதுமாக அணைத்தும் கொள்ளலாம். மேலும், மேம்பட்ட கண்ட்ரோலுக்காக சாய்வு-கோண சென்சார் உள்ளது.

royal enfield flying flea s6 unveiled

பைக்கின் எடையைக் குறைக்கும் பொருட்டும், வெப்பநிலையை கட்டுப்படுத்தும் பொருட்டும் பேட்டரி வைக்கப்படும் பெட்டி ஆனது மாங்கனீசு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. ஹேண்டில்பாருக்கு மத்தியில் வட்டமான டச் ஸ்கிரீன் TFT கிளஸ்டர் திரை ஆனது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பாரம்பரியத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது.

எஃப்.எஃப் எஸ்6 எலெக்ட்ரிக் பைக்கின் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் சொந்தமாக உருவாக்கப்பட்ட பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் பைக்கின் வட்ட வடிவிலான TFT திரை ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் QWM2290 செயலி 4G, ப்ளூடூத், மற்றும் வைஃபை வசதிகளை வழங்கக்கூடியதாக உள்ளது. ஆதலால், இந்த திரை மூலமாக நேவிகேஷன், மீடியா மற்றும் வாகனத்தை பற்றிய தகவல்களை பெறலாம்.

royal enfield flying flea s6 unveiled

பயணத்தின்போது எளிமையான கட்டளைகளுக்கு, ஓட்டுநரின் போன் வழியாக செயல்படும் குரல் உதவி பொத்தான் உள்ளது. இவற்றுடன், ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்கள், ஸ்மார்ட்வாட்ச்/ மொபைல் செயலி இணைப்புகள் மூலம் சாவியில்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்யும் வசதி, ரைடு மோட்களை பெறுவதுடன், பைக்கின் சார்ஜ் அளவு மற்றும் அருகில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களை கண்டறிதல் போன்ற அம்சங்களை உரிமையாளர்கள் தங்களது மொபைல் போன் மூலமாகவே நிர்வகிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு தற்போது எஃப்.எஃப் எஸ்6 என்ற ஒரு ஸ்க்ராம்ப்ளர் ரக எலெக்ட்ரிக் பைக்கை கண்காட்சியில் காட்சிக்கு மட்டுமே நிறுத்தி உள்ளது. மற்றப்படி, பைக்கின் பேட்டரி, ரேஞ்ச் குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. அதன்படி, இதுவரை விலை அறிவிக்கப்படாததால், இந்தியாவில் 2026-ஆம் ஆண்டு வெளியீட்டிற்கு நெருக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

royal enfield flying flea s6 unveiled

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள பொறியியல் குழுக்களின் ஆதரவுடனும், ராயல் என்பீல்டின் வல்லம் வடகல் ஆலையில் உள்ள பிரத்யேக உற்பத்தி வசதியுடனும், இந்தத் திட்டம் பெரிய அளவில் விரிவடைய வாய்ப்புள்ளது. எஃப்.எஃப் எஸ்6 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 21:23 [IST]
English summary
Royal enfield flying flea s6 electric bike showcased at eicma 2025 in italy check all details here
மேலும்... #royal enfield #electric bike #eicma
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X