ராயல் என்ஃபீல்டு பைக் கஸ்டமர்களுக்கு வர பிரசாதமாக அமைந்த நிகழ்ச்சி! சென்னையை அதிர வைத்த RE பைக் ரேசர்ஸ்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னையில் 'ஜிம்கானா' (Gymkhana) என்கிற பெயரில் புதிய மோட்டார்சைக்கிள் நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளது. கடந்த ஜூன் 28ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

உலகளவில் பல நாடுகளில் செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு நம் சென்னை தான் தலைமையிடமாக உள்ளது. ஏனெனில், சென்னையிலும், சென்னையை சுற்றிலும் தான் இந்த நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன. குறிப்பாக, வட சென்னையில் திருவொற்றியூரில் உள்ள ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை ஆனது 1955ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது.

royal enfield

இது இல்லாமல், தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு அருகே செய்யாறிலும், ஆந்திர பிரதேசத்திலும் புதிய தொழிற்சாலைகளை நிறுவ ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, பைக்குகளின் உற்பத்தி பணிகளை அதிகரித்து வருவதற்கு மத்தியில், இளைஞர்கள் மத்தியில் ராயல் என்ஃபீல்டு பிராண்ட் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும் விதமாக அவ்வப்போது நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளையும் ராயல் என்ஃபீல்டு நடத்துவது உண்டு.

அந்த வகையில், சென்னைக்கு அருகே படுர் என்கிற பகுதியில் அமைந்துள்ள 'சென்னை மோட்டோ பார்க்'-இல் ஜிம்கானா என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சியை ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் நடத்தி உள்ளது. ஜூன் 28இல் ஒரேயொரு நாள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு பைக் கஸ்டமர்களுக்கு அவர்களின் பைக்குகளில் புதிய சாகசங்களை செய்துப் பார்க்க வழிவகை செய்யப்பட்டன.

royal enfield gymkhana hits chennai

இதன் மூலமாக, நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர்கள் தங்களது பைக் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடிந்தது. மேலும், ராயல் என்ஃபீல்டு பைக் கஸ்டமர்களுக்காக வொர்க்‌ ஷாப்களும் இந்த நிகழ்ச்சியில் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கஸ்டமர்களுக்காக நான்கு பிரத்யேகமான ரைடிங் பகுதிகள் சென்னை மோட்டோ பார்க்கில் இடம்பெற்று இருந்தன.

இந்த நான்கு ரைடிங் பகுதிகள், அனுபவம் ரீதியாகவும், விளையாட்டு ரீதியாகவும் வகைப்படுத்தப்பட்டு இருந்தன. மேலும், இந்த நான்கு ரைடிங் பகுதிகள் நான்கு வெவ்வேறு விதமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டு இருந்தன. அந்த நான்கு வெவ்வேறு ராயல் என்ஃபீல்டு பைக்குகளாவன, ஹிமாலயன் 450, ஸ்க்ராம் 440, குரில்லா 450 மற்றும் ஹண்டர் 350 என்பன ஆகும்.

royal enfield gymkhana hits chennai

இது இல்லாமல், 650சிசி பைக்குகளுக்கு என்று தனியாகவும் ரைடிங் பகுதிகளை ராயல் என்ஃபீல்டு அமைத்திருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பைக் சாகசங்கள், குரில்லா 450 பைக்கில் டிரிஃப்ட் எவ்வாறு செய்வது என்பதற்கான பயிற்சிகள், அட்வென்ச்சரான பயணங்களுக்கான வொர்க் ஷாப்கள் மற்றும் வீட்டிலேயே நாமாகவே மேற்கொள்ளக் கூடிய பராமரிப்புகள் குறித்த பாடங்களும் இடம்பெற்று இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் குறித்த அறிய ராயல் என்ஃபீல்டு ஜிம்கானா நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது சிறந்த மேடையாக அமைந்தது. இவ்வாறான நிகழ்ச்சிகள் ஏற்கனவே உள்ள கஸ்டமர்களை ஈர்ப்பது மட்டுமின்றி, ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்க திட்டமிட்டு வருபவர்களையும் ஈர்க்கும்.

Article Published On: Friday, July 3, 2026, 17:14 [IST]
English summary
Royal enfield gymkhana hits chennai pure adrenaline and expert track action at moto park
மேலும்... #royal enfield #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X