டிவிஎஸ் கம்பெனிக்கு எங்க இருந்துதான் இப்படியெல்லாம் தோணுது! அப்பாச்சியை இப்படி கூட மாற்றலாமா?

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம், குஜராத்தில் நடைபெற்ற 2026 ரான் உட்சவ் (Rann Utsav) திருவிழாவில் தனது பிரத்யேக மோட்டார்சைக்கிள்களை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் இரண்டாவது ஆண்டாகப் பங்கேற்கிறது. இங்கு பார்வையாளர்களை கவர்ந்த டிவிஎஸ் தயாரிப்புகளை பற்றி இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.

டிவிஎஸ் ரோனின் (Ronin), அப்பாச்சி ஆர்டிஆர் 200 (Apache RTR 200), ஆர்டிஆர் 310 மற்றும் ஆர்ஆர் 310 (RR 310) ஆகிய, விற்பனையில் உள்ள மோட்டார்சைக்கிள்களின் தனிப்பயனாக்கப்பட்ட வெர்சன்கள் (Versions) நிறுவனத்தின் பிரீமியம் அரங்கில் முக்கிய இடம் பெற்றன. இவை குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் (Rann of Kutch) பகுதிக்கே உண்டான நிலப்பரப்பு, வண்ணங்கள், கைவினை மரபுகளை பிரதிப்பலிக்கின்றன.

tvs motor showcased custom bikes at rann utsav 2026

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் செயல்படும் 'இமோர் கஸ்டம்ஸ்' (Eimor Customs) என்கிற அங்கீகரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடிஃபிகேஷன் (Modification) நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் மோட்டார் உருவாக்கிய இந்த சிறப்பு பதிப்பு பைக்குகள், 'ரான் ஆஃப் கட்ச் பகுதியின் உப்பு மற்றும் வானத்தின் சிம்போனி' கருப்பொருளைக் கொண்டுள்ளன. டிவிஎஸ் காட்சிப்படுத்திய நான்கு மோட்டார் சைக்கிள்களிலும் லேசரால் வெட்டப்பட்ட துருப்பிடிக்காத எஃகு பேட்ஜ்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பைக்கும் பிரத்யேகமாக கைகளால் வண்ணம் தீட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றில் உப்பு நிலப்பரப்பு, திறந்தவெளி வானத்தின் அழகியலை பிரதிபலிக்கும் வடிவமைப்பு ஹைலைட்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன், திட்டமிடப்படாத ஆய்வாக உருவாக்கப்பட்ட ஐந்தாவது மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ரோனின் மோட்டார்சைக்கிளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடைசியில் வந்தாலும், இதுதான் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

tvs motor showcased custom bikes at rann utsav 2026

அந்த அளவிற்கு, இதற்கு ஆன்-ரோடு & ஆஃப்-ரோடு என பயன்படுத்தக்கூடிய டயர்கள், மேம்படுத்தப்பட்ட முன் மட்கார்டு, மாடுலர் லக்கேஜ் கொண்ட பின் ரேக் மற்றும் அஜ்ரக் கைவினைப் பொருட்களால் ஆன தோல் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வண்ணம் வானத்தின் நீலத்தில் இருந்து உப்பு வெள்ளைக்கு மாறுவது போன்று உள்ளது.

பிரத்யேக வாகனங்களைத் தவிர, டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் உரிமையாளர்கள் மற்றும் ரோனின் பைக்கின் கல்ட் உறுப்பினர்களுக்கு குழு பயணங்கள் மற்றும் பயணம் தொடர்பான செயல்பாடுகளையும் டிவிஎஸ் மோட்டார் ஏற்பாடு செய்திருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வின் முக்கிய ஈர்ப்பாக மோட்டார்சைக்கிள்களே விளங்கின.

tvs motor showcased custom bikes at rann utsav 2026

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் சுதர்ஷன் வேணு கூறுகையில், "ரான் ஆஃப் கட்ச் இந்தியாவின் மிக அற்புதமான கலாச்சார மற்றும் பாரம்பரிய வெளிப்பாடுகளில் ஒன்றாகும். மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் நீண்டகால தொலைநோக்கு பார்வையும், இந்தியாவின் இலக்குகள் மற்றும் அனுபவமிக்க சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஊக்கமும் டிவிஎஸ் மோட்டாருக்கு ஒரு வலுவான உத்வேகமாக இருந்துள்ளது" என்றார்.

அவர் மேலும், "இந்தியாவின் பொக்கிஷங்களை உலக சுற்றுலா வரைபடத்தில் நிலைநிறுத்தும் மோட்டார்சைக்கிள் தலைமையிலான சாகசங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதன் மூலம் இந்த பார்வையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது கௌரவமாகும்" என்றும் தெரிவித்தார். அடுத்ததாக எலெக்ட்ரிக் 2-வீலர் மார்க்கெட்டில் தீவிரமாக ஈடுப்பட தயாராகிவரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் சுமார் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் முன்னணி 2-வீலர் நிறுவனமாக ஆதிக்கம் செலுத்துவதற்கும், மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து கவனத்தை ஈர்ப்பதற்கும் இவ்வாறான நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்வதை டிவிஎஸ் மோட்டார் எப்போதும் மறந்தது இல்லை என்பது தற்போது 2026 ரான் உட்சவ் நிகழ்ச்சியின் மூலம் உறுதியாகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 15, 2026, 5:00 [IST]
English summary
Tvs motor showcased custom apache and ronin motorcycles at rann utsav 2026
மேலும்... #tvs motor #tvs apache #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X