சிறப்பு நிருபர்கள் மூலம் டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சி லைவ்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 11 வது டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சியின் நிகழ்வுகளை சிறப்பு நிருபர்கள் மூலம் டிரைவ் ஸ்பார்க் உடனுக்குடன் வழங்கவுள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச ஆட்டோ கண்காட்சியாகவும், பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆட்டோ கண்காட்சி என்ற பெருமையையும் டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், 11 வது டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சி நாளை முதல் வரும் 11ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதல் இரண்டு நாட்களும் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவுள்ளது.
வரும் 7ந் தேதி முதல் பொது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இந்த கண்காட்சியில் தங்களது புதிய மாடல்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பரைசாற்றுவதற்கு அனைத்து ஆட்டோ நிறுவனங்களும் தயாராகிவிட்டன.
இந்த நிலையில், டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சியின் நிகழ்வுகளை எமது இரண்டு சிறப்பு நிருபர்களின் மூலம் உடனுக்குடன் டிரைவ் ஸ்பார்க் தளம் வழங்கவுள்ளது.
புத்தம் புதிய மாடல்கள், கான்செப்ட் கார், பைக் மாடல்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் டிரைவ் ஸ்பார்க் தளம் ஒன்இந்தியா வாசகர்களுக்காக உடனுக்குடன் வழங்கவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








