புதிய க்யூ-3 கிராஸ்ஓவர் சொகுசு எஸ்யூவியை காட்சிப்படுத்திய ஆடி

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் க்யூ-3 மற்றும் ஏ-3 செடான் கார்களை ஆடி நிறுவனம் பார்வைக்கு அறிமுகம் செய்தது. அப்போது, பாலிவுட் நடிகைகள் கேத்ரீனா கைப் மற்றும் லிசா ரே ஆகியோர் அங்கு வந்ததால் சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Audi Q3

ஆடி அரங்குக்கு வந்தனர். கார்களுன் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அவர்களை போட்டோ எடுக்க பத்திரிக்கையாளர்கள் முண்டியடித்ததால் அங்கு சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் ஆடி கார் நிறுவனம் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்து 5 ஆண்டுகளில் ஆடி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று தற்போது விற்பனை அளவில் 3 வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் நீண்ட கால அடிப்படையிலான திட்டங்களுடன் ஆடி முதலிடத்தை பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது க்யூ-3 எஸ்யூவியை பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதேபோன்று, ஏ-3 செடான் கார், எஸ்-6 லிமோசின் கார்களையும் ஆடி பார்வைக்கு அறிமுகம் செய்தது. அப்போது, பாலிவுட் நடிகைகள் கேத்ரீனா கைப் மற்றும் லிசா ரே ஆகியோர் அங்கு வந்ததனர்.

க்யூ-3 எஸ்யூவிக்கு முன் நின்று அவர்கள் ஒய்யாரமாக போஸ் கொடுத்ததை படம் எடுக்க பத்திரிக்கை போட்டோகிராபர்கள் முண்டியடித்ததால் அங்கு சிறு தள்ளுமுள்ளும், பரபரப்பும் ஏற்பட்டது.

ஆடி பார்வைக்கு வைத்துள்ள கிராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த இந்த புதிய க்யூ-3 எஸ்யூவி இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய ஆடி எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் வர்த்தக ரீதியிலான அறிமுகத்தின்போது வெளியிட ஆடி முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2012, 11:20 [IST]
English summary
Germany's luxury car maker Audi has unveiled Q3 crossover SUV in Delhi auto expo. The much awaited suv will be commercially launched in few months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+