இந்தியாவில் மான்ஸ்ட்டர் 795 சூப்பர் பைக்கை அறிமுகப்படுத்திய டுகாட்டி

இந்தியாவில் ரூ.9 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலையில் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வரும் டுகாட்டி தற்போது ரூ.5.99 லட்சம் என்ற அதிரடியான விலையில்(டுகாட்டியின் குறைந்த விலை சூப்பர் பைக்) புதிய மான்ஸ்ட்டர் 795 சூப்பர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

Ducati Monster 795

டுகாட்டி பைக்குகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால், அந்த பைக்குகளின் விலை மற்ற நிறுவனங்களை காட்டிலும் அதிகமாக இருப்பதாக கருத்து நிலவி வந்தது.

இந்த குறையை போக்கும் விதமாக ரூ.6.99 லட்சம் விலையில் புதிய மான்ஸ்ட்டர் 795 சூப்பர் பைக்கை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் டுகாட்டி அறிமுகம் செய்தது டுகாட்டி. ஆனால், ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலையில் டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஆட்டோ துறையினரும் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், பிரிட்டனை சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் டுகாட்டி மான்ஸ்ட்டரை 795 விலையை விட குறைவான விலையில் தனது சூப்பர் பைக் மாடலை அறிமுகம் செய்ததும் டுகாட்டியை யோசிக்க வைத்துவிட்டது.

இதையடுத்து, அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 சூப்பர் பைக்கின் விலையை ரூ.1 லட்சம் அதிரடியாக குறைத்துவிட்டது டுகாட்டி. இது அறிமுக சலுகை என அதற்கு சப்பை கட்டு காரணங்களையும் கூறி டுகாட்டி சமாளித்துள்ளது.

இருப்பினும், மான்ஸ்ட்டர் 795 சூப்பர் பைக்கின் விலையை ரூ.5.99 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்வதாக டுகாட்டி அறிவித்துள்ளது சூப்பர் பைக் வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 9, 2012, 12:20 [IST]
English summary
Ducati has launched New Monster 795 priced at Rs.5.99 lakhs in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+