டெல்லி ஆட்டோ ஷோவில் எக்காளமிட்ட புதிய ஃபோர்டு எஸ்யூவி!
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் கர்ஜிக்கும் வடிவைப்புடன் ஃபோர்டு பார்வைக்கு வைத்திருக்கும் ஈக்கோ ஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி பத்திரிக்கையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது.

100 நாடுகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவி இந்தியா மற்றும் பிரேசிலில் உள்ள ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே ஃபோர்டு அறிவித்தபடி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள 8 கார்களில் ஈக்கோ ஸ்போர்ட் எஸ்யூவி இரண்டாவது மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில் வர்த்தக ரீதியில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த புதிய எஸ்யூவி ஈக்கோ பூஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட 1.6 லிட்டர் எஞ்சினுடன் வர இருக்கிறது. வசீகரமான வடிவமைப்பு கொண்ட இந்த புத்தம் புதிய எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று ஃபோர்டு கருதுகிறது.


Click it and Unblock the Notifications








