செவர்லே பிராண்டில் 2 புதிய மாடல்களை காட்சிப்படுத்திய ஜிஎம்
பிரிமியம் அம்சங்கள் நிறைந்த செயில் ஹேட்ச்பேக் கார் மற்றும் தவேரா போன்ற மற்றொரு புதிய எம்பிவி காரையும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஜெனரல் மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்திருக்கிறது. இதில், செயில் ஹேட்ச்பேக் கார் வரும் ஜூன் அல்லது ஜூலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த இரண்டு புதிய மாடல்களும் தனது சீன கூட்டாளியான ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்டிரி கார்ப்பரேஷன்(செயிக்)ஒத்துழைப்புடன் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஜிஎம்.
இதனிடையே, இந்திய சாலை நிலைகளுக்கேற்ப இரண்டு புதிய மாடல்களையும் வடிவமைப்பில் சிறிது மாற்றங்களை செய்யும் பணிகளை தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.
செவர்லே பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த இரண்டு புதிய கார் மாடல்களில் புதிய எம்பிவி இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இரண்டு மாடல்களும் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








