3 புதிய டூ வீலர் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஹீரோ!

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 3 புதிய இரு சக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோ கார்ப் இன்று அறிமுகப்படுத்தியது.

Hero New Models

இதில், தற்போது விற்பனை செய்யப்பட்டும் வரும் பேஷன் ப்ரோவின் மேம்படுத்தப்பட்ட 110 சிசி எஞ்சின் கொண்ட பேஷன் எக்ஸ் ப்ரோ மாடலும், புத்தம் புதிய இக்னிட்டர் என்ற புதிய 125 சிசி பைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தவிர, 110 சிசி மேஸ்ட்ரோ ஸ்கூட்டரையும் ஹீரோ மோட்டோ கார்ப் இன்று அறிமுகம் செய்தது. இந்த மூன்று புதிய மாடல்களும் அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய ஹீரோ மோட்டோ கார்ப் சிஇஓ பவன் முஞ்சால் கூறுகையில்,"புதிய மாடல்கள் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் எதிர்கால திட்டத்தின் முதல் படியாக அமையும். மேலும், புதிய மாடல்கள் மூலம் மார்க்கெட்டில் முதலிடத்தை தொடர்ந்து தக்கவைக்க உதவும்," என்று தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 4, 2012, 15:27 [IST]
English summary
Country's largest two wheeler maker Hero Moto corp has launched 3 new models Delhi auto expo today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+