ஏ-ஸ்டார் கன்வெர்ட்டிபிளை காட்சிக்கு வைத்து அசத்திய மாருதி
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மாருதி அரங்கில் நிறுத்தியிருந்த ஏ-ஸ்டார் கன்வெர்ட்டிபிள் மாடல் அனைவரையும் கவர்ந்திழுத்து சுற்றி வரச் செய்தது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி என சொகுசு கார் நிறுவனங்களின் மாடல் வரிசையில் மட்டும் கன்வெர்ட்டிபிள் கார் மாடல்களை பார்த்து பழகிப் போன நமக்கு, கைக்கு எட்டும் விலையில் கிடைக்கும் மாருதி ஏ-ஸ்டார் காரின் கன்வெர்ட்டிபிள் மாடலை பார்த்ததும், சட்டென கன்வெர்ட்டிபிள் கார் வாங்கும் ஆசையை தூண்டுவதாக இருந்தது.
கன்வெர்ட்டிபிள் கார்களில் ஹாயாக கூரையை திறந்து வைத்துக்கொண்டு சினிமாவில் ஹீரோ ஹீரோயின்கள் டூயட் பாடிச் செல்லும் காட்சிகளை பார்த்து, ஏக்க பெருமூச்சு விட்ட நிலையில் கன்வெர்ட்டிபிள் கார் நமக்கும் சாத்தியம்தான் என்று ஏ-ஸ்டார் கன்வெர்ட்டிபிள் தோன்ற செய்தது உண்மைதான்.


Click it and Unblock the Notifications








