எஸ்எல்எஸ் ரோட்ஸ்டெர் கன்வெர்ட்டிபிள் காரை களமிறக்கிய பென்ஸ்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது எஸ்எல்எஸ் ரோட்ஸ்டெர் கன்வெர்ட்டிபிள் மற்றும் எம்-கிளாஸ் கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

Mercedes Benz SLS Roadster

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், புதிய மாடல்கள் அடுத்தடுத்து களமிறக்கப்பட்டு வருகின்றன. சொகுசு கார் மார்க்கெட் விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது.

அந்த வகையில், தற்போது டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது திறந்து மூடும் கூரை கொண்ட எஸ்எல்எஸ் ரோட்ஸ்டெர் மற்றும் எம்-கிளாஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில், எஸ்எல்எஸ் ரோட்ஸ்டெர் கார் உலக அளவில் பல்வேறு நாடுகளில் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்ற மாடல்.

நீண்ட பானட், அதிக நீளம் கொண்ட வீல் பேஸ், திறந்து மூடும் வசதிகொண்ட கூரை உள்ளிட்ட அம்சங்களுடன் நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட எஸ்எல்எஸ் ரோட்ஸ்டெர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று பென்ஸ் அதிக நம்பிக்கையுடன் கூறுகிறது.

எஸ்எல்எஸ் ரோட்ஸ்டெர் காரில் 6208 சிசி கொண்ட அதிசக்தி வாய்ந்த வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 571 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. மேலும், இந்த கார் வெறும் 3.8 விநாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் பெற்றது.

இந்த கார் அதிகபட்சம் 317 கிமீ வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 10, 2012, 15:49 [IST]
English summary
Mercedes Benz has launched SLS roadster Convertible model in Indian market. The 8 cyclinder V8 engine produces 571 horse power at 6,800 rpm. It can go from 0-100 km/h in under 3.8 seconds.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+