டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புதிய வெஸ்பா ஸ்கூட்டர்கள்
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது பிரிமியம் ரக வெஸ்பா பவர் ஸ்கூட்டர்களை பியாஜியோ பார்வைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனேவ எல்எம்எல் கூட்டணியில் வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களை பியாஜியோ விற்பனை செய்து வந்தது. ஸ்கூட்டர் மவுசு குறைந்ததால் உற்பத்தியை நிறுத்தின.
இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் ஸ்கூட்டர்களுக்கான மவுசு கணிசமாக அதிகரித்துள்ளதால் வெஸ்பா ஸ்கூட்டர்களை பியாஜியோ தனித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது.
புனே அருகிலுள்ள பாரமதியில் உள்ள பியாஜியோ ஆலையில் வெஸ்பா ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. வரும் ஏப்ரல் மாதத்தில் முதல் வெஸ்பா ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வெஸ்பா ஸ்கூட்டர் ரூ.60,000 விலையில் விற்பனைக்கு கொண்டு வர பியாஜியோ திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








