புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்: ராயல் என்பீல்டு அறிமுகம்
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு சற்றுமுன் அறிமுகப்படுத்தியுள்ளது.

முந்தைய மாடலை விட அதிக கட்டிங் எட்ஜ் வடிவமைப்புடன் புதிய தன்டர்பேர்டு வந்துள்ளது. புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுடன் பைக் ரைடர்களுக்கான ஜாக்கெட்டுகள், ஹெல்மெட்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆக்சஸெரீஸ்களையும் ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐஷர் மோட்டார்ஸ் சிஇஓ சித்தார்த் லால்,"எங்களது தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும், கடந்த 2010ல் 50,000 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்தோம். ஆனால், கடந்த ஆண்டு 73,000 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








