புதிய டொயோட்டோ பிரையஸ் ஹைபிரிட் கார் அறிமுகம்!
ரூ.27.39 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிரையஸ் ஹைபிரிட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது டொயோட்டோ.

கடந்த 1997ம் ஆண்டு சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டோ பிரையஸ் இதுவரை 24 லட்சம் உரிமையாளர்களை பெற்றுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் காரான பிரையஸ் அவ்வப்போது நவீன தொழில்நுட்பங்களால் மேம்படுத்தப்பட்டு வருகி்றது.
அந்த வகையில், நவீன தொழில்நுட்பங்கள் அம்சங்களுடன் புதிய பிரையஸ் காரை டொயோட்டோ சமீபத்தில் அறிமுகம் செய்தது.
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தற்போது இந்த புதிய மாடல் பிரையஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிரையஸ் ரூ.27.39 லட்சம் முதல் ரூ.29.41 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பிரையஸ் காரில் பேட்டரி மின் சக்தி தவிர கூடுதலாக சூரிய மின்சக்தியும் பெறும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு முதன்முதலாக பிரையஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 150 பிரையஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








