7 மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து அதிர வைத்த டிரையம்ப்
பிரிட்டனை சேர்ந்த டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அதிரடியாக களமிறங்கியுள்ளது. தனது 7 மோட்டார்சைக்கிள்கள் மாடல்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.

7 புதிய மோட்டார்சைக்கிள்களை டிரையம்ப் களமிறக்கியுள்ளது இந்திய மார்க்கெட்டில் உள்ள பிற சூப்பர் பைக் மற்றும் குரூஸர் பைக் தயாரிப்பாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளத.
டிரையம்ப் அறிமுகப்படுத்தியுள்ள மாடல்கள் மற்றும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
டிரையம்ப் போனிவில்லி :ரூ.5.5 லட்சம்
டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் :ரூ.5.75 லட்சம்
டிரையம்ப் டேடோனா 675 :ரூ.7 லட்சம்
டிரையம்ப் ஸ்பீடு டிரிபிள் :ரூ.8 லட்சம்
டிரையம்ப் டைகர் 800எக்ஸ்சி :ரூ.11.4லட்சம்
டிரையம்ப் ஸ்ட்ரோம் :ரூ.17 லட்சம்
டிரையம்ப் ராக்கெட்-3 :ரூ.22 லட்சம்
இந்திய சூப்பர் பைக் மார்க்கெட்டுக்கு தகுந்தவாறு விலை நிர்ணயித்து டிரையம்ப் அணி வகுத்துள்ள மோட்டார்சைக்கிள் மாடல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கும் டுகாட்டி மான்ஸ்டர் 795 மோட்டார்சைக்கிள் மீதுதான் ஆர்வம் மிகுந்துள்ளது.
இந்த நிலையிஸ், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்ய டிரையம்ப் திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய அசெம்பிளிங் ஆலையை விரைவில் இந்தியாவில் டிரையம்ப் கட்டும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு மத்தியில் டிரையம்ப் பைக்குகள் வாடிக்கையாளர்களின் கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications








