ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரை, இந்தியாவில் அறிமுகம் செய்தார் விராட் கோஹ்லி

Written By:

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

விராட் கோஹ்லி அறிமுகம் செய்த ஆர்8...

விராட் கோஹ்லி அறிமுகம் செய்த ஆர்8...

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரின் இந்திய அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் செய்யபட்டது.

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரை இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் கொள்ளளவு - 5.2 லிட்டர்

இஞ்ஜின் வகை - வி10

பவர் - 8,250 ஆர்பிஎம்களில் 602 பிஹெச்பி

டார்க் - 6,500 ஆர்பிஎம்களில் 560 என்எம்

திறன்;

திறன்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், அதிகபட்சமாக மணிக்கு 330 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக தான் 4 சக்கரங்களுக்கு பவர் செலுத்தபடுகிறது. இது 7-ஸ்பீட் எஸ்-ட்ரானிக் ட்யூவல் கிளட்ச் டிரான்னிஷன் மூலமாக தான் இஞ்ஜினுடன் இணைக்கபட்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், கூர்மையான ஆங்குலான் டிசைன் கொண்டுள்ளது. ஆ8 மாடலை காட்டிலும், ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், ஆக்கிரோஷமான கிரில் மற்றும் ஏர் இண்டேக்களுடன் இதன் ஃப்ரண்ட் எண்ட் ரீ-ஸ்டைல் செய்யபட்டுள்ளது.

ஹெட்லேம்ப்கள்;

ஹெட்லேம்ப்கள்;

ஆடியின் லேசர் லைட் டெக்னாலஜியுடன் கூடிய எல்ஈடி ஹெட்லேம்ப்கள், இந்த ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காருக்கு கூடுதல் கூர்மையான தோற்றத்தை வழங்குகிறது.

சைட் தோற்றம்;

சைட் தோற்றம்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரின் பக்கவாட்டில் உள்ள ஏர் இண்டேக்கள், இதன் இஞ்ஜினுக்கு காற்றை செலுத்துகிறது.

ரியர் தோற்றம்;

ரியர் தோற்றம்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரின் ரியரில் உள்ள பிக்ஸ்ட் ஸ்பாய்ளர், டிஃப்யூஸர் மற்றும் ஷார்ப் எல்ஈடி டெய்ல்லைட்களுக்கு அடியில் உள்ள ஏர் வெண்ட்கள், இதன் ஆக்கிரோஷமான தோற்றத்திற்கு கூடுதல வலு சேர்க்கிறது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரின் இண்டீரியரில் பெரிய மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இதன் இண்டீரியரில் ஆடியின் அற்புதமான 12.3 ஆடி விர்சுவல் காக்பிட் உள்ளது. இது ஸ்டியரிங் வீல் பகுதிக்கு பின்னால் உள்ள இடத்தை அடைத்து கொள்கிறது.

போட்டி;

போட்டி;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், இந்திய வாகன சந்தையில் நிஸ்ஸான் ஜிடி-ஆர், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடிஎஸ் மற்றும் போர்ஷே 911 டர்போ ஆகிய கார்களுடன் போட்டி போட வேண்டிஉஅ நிலை உள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரின் புக்கிங்-கை, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆடி டீலர்ஷிப்களில் செய்து கொள்ளலாம்.

விலை;

விலை;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், 2.47 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஆடியின் அதிவேகமாகன ஆர்8 எல்எம்எக்ஸ் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய விராட் கோலி!

தமிழ் சினிமா நட்சத்திரங்களும், அவர்களது ஆஸ்தான கார் மாடல்களும்...!!

ஆடி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Audi has launched their ballistic Audi R8 V10 Supercar in India. Audi R8 V10 Supercar was launched in Indian at the 2016 Delhi Auto Expo by Indian Test Captain Virat Kohli and Bollywood actress Alia Bhatt. Bookings for the new Audi R8 V10 Plus can be done at your nearest Audi dealerships. The new Audi R8 supercar is priced at around Rs. 2.47 Crores, ex-showroom (Mumbai).
Story first published: Friday, February 12, 2016, 19:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark