டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 ஸ்போர்ட்ஸ் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 ஸ்போர்ட்ஸ் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.
பெனெல்லி டொர்னேடோ 302 ஸ்போர்ட்ஸ் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

டொர்னேடோ 302 ஸ்போர்ட்ஸ் பைக் பற்றி...
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக், பெனெல்லி நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் முழுமையான ஃபேரிங் செய்யபட்ட நுழைவுநிலை ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும்.
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக், பெனெல்லி டிஎன்டி 300 நேக்கட் பைக்கின் முழுமையான ஃபேரிங் செய்யபட்ட வேரியண்ட் ஆகும்.

இஞ்ஜின்;
இஞ்ஜின் கொள்ளளவு - 300 சிசி
இஞ்ஜின் வகை - ட்யூவல் ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட்கள் கொண்ட இன்லைன் ட்வின் இஞ்ஜின்
பவர் - 12,000 ஆர்பிஎம்களில் 35 பிஹெச்பி
டார்க் - 9,000 ஆர்பிஎம்களில் 27 என்எம்

கியர்பாக்ஸ்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக்கின் இஞ்ஜின், 6 - ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

திறன்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 60 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.
டொர்னேடோ 302 பைக், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.38 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக், உச்சபட்சமாக மணிக்கு 154 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக், முழுவதுமாக ஃபேரிங் (பொலிவு கூட்டபட்ட) செய்யபட்ட டிசைன் கொண்டுள்ளது.

ஹெட்லேம்ப்கள்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக்கின் முன் பகுதியில் உள்ள ட்வின் ஹெட்லேம்ப்கள், இந்த பைக்கிற்கு வழங்கபட்டுள்ள ஃபேரிங்குடன் கச்சிதமாக பொருந்துகிறது.

எக்ஸ்ஹாஸ்ட்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக்கிற்கு வழங்கபட்டுள்ள டபுள் பாரல் எக்ஸ்ஹாஸ்ட், மிகவும் கூற்மையான தோற்றத்தை வழங்குகிறது.
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக் இயக்கபடும் போது, இந்த எக்ஸாஸ்ட் பலத்த சத்தம் வழங்குகிறது.

சஸ்பென்ஷன்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக்கின் முன்பகுதியில் 41 மில்லிமீட்டர் அப்-சைட் டவுன் ஃபோர்க்கும், பின்பகுதியில் மோனோஷாக் ஃபோர்க்கும் உள்ளது.

பிரேக்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக்கின், ஃப்ரண்ட் பகுதியில் 260 மில்லிமீட்டர் ட்வின் டிஸ்க் பிரேக்களும், ரியர் வீலில் 240 மில்லிமீட்டர் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

வீல்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக்கின், 2 வீல்களும் 17 இஞ்ச் அளவிலான டையாமீட்டர் கொண்டுள்ளது.
இதன் முன் பக்கத்தில் 110 செக்ஷன் டைர்களும், பின் பக்கத்தில் 150 செக்ஷன் டைர்களை கொண்டுள்ளது.

அறிமுகம்?
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக், இந்தியாவில் இந்த ஆண்டின் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, கேடிஎம் ஆர்சி 390 மற்றும் கவாஸாகி நிஞ்ஜா 300 ஆகிய பைக்களுடன் போட்டியிட வேண்டி இருக்கும்.

விலை;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302 பைக், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, சுமார் 3 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிரைவ்ஸ்பார்க் குழுவினரை கவர்ந்த சிறந்த பைக்குகள்!
டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி டொர்னேடோ நேக்கட் டி-135 பைக் காட்சிபடுத்தபட்டது
பெனெல்லி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








