பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

By Ravichandran

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் நுழைவு நிலை பைக்கான இந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக், சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகம் செய்யபட உள்ளது. முன்னதாக, இந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக், 2015 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

bmw-motorrad-g310r-bike-2016-delhi-auto-expo-unveil

இஞ்ஜின்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக், 313 சிசி, ஃப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் வசதி கொண்ட சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. பேக்வர்ட் டில்டட் இஞ்ஜின் (பின்திசையில் சாய்த்து பொருத்தபட்டுள்ள இஞ்ஜின்) 38 பிஹெச்பி, 28 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் வகையில் இஞ்ஜினியர்கள் வடிவமைத்துள்ளனர்.

டிவிஸ் நிறுவனத்துடன் கூட்டணி;

இஞ்ஜின் மற்றும் பைக்கின் உருவாக்கத்திற்கு, பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், டிவிஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் மூலம் உருவாக்கபட்டு, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மூலம் தயாரிக்கபட உள்ளது.

சிறப்பம்சங்கள்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக், உறுதியான குழாய் வடிவ ஸ்டீல் பிரேம்-மை சுற்றி வடிவமைக்கபட்டுள்ளது. இந்த நுழைவு நிலை பைக்-கிற்கான ஃப்ரண்ட் ஃபோர்க், தலைகீழாக பொருத்தபட்டுள்ளது. நல்ல ஹேண்ட்லிங்க் (கையாளுதல்) மற்றும் கார்னரிங்-கிற்காக, பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக்-கிற்கு வழக்கத்தை காட்டிலும், நீண்ட ஸ்விங்ஆர்ம் பொருத்தபட்டுள்ளது.

இதர அமைப்புகள்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக், 110/70 ஆர்17 ஃப்ரண்ட் மற்றும் 150/60 ஆர்17 ரியர் டையர்கள் மூலம் இயங்குகிறது. இந்த பைக், ஹை-பெர்ஃபார்மன்ஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏபிஎஸ் அல்லது ஆண்டி-லாக் பிரேக்கிங் வசதிகளை ஸ்டாண்டர்ட் உபகரணங்களாக கொண்டுள்ளது.

கஸ்டமைசேஷன் வாய்ப்புகள்;

வாடிக்கையாளர்கள் பிரத்யேக திருப்தி வழங்கும் வகையில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் பல்வேறு தேர்வு முறையிலான ஆக்சஸரீஸ்களை வழங்க உள்ளது.

போட்டி நிறுவனங்கள்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக், கேடிஎம், ஹோண்டா மற்றும் யமஹா உள்ளிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் போட்டியிட வேண்டி இருக்கும். எனினும், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் இந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர் பைக்கை, பிரிமியம் தயாரிப்பாகவும், அதற்கு ஏற்ற கூடுதல் விலையிலுமே விற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
BMW Motorrad has planned to unveil their BMW Motorrad G310R Bike at 2016 Delhi Auto Expo. BMW Motorrad would unveil this all-new entry level product for international markets also. Earlier, BMW Motorrad debuted their G310R motorcycle at the 2015 EICMA Motor Show, which was held in Milan.
Story first published: Thursday, January 21, 2016, 20:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X