புதிய செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் கார் அறிமுகம்!

By Saravana

மாருதி டிசையரின் விற்பனை எண்ணிக்கையை பார்த்து, அதில் சிறிதாவது நமக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து புதிய காம்பேக்ட் செடான் கார்கள் வரிசை கட்டி வருகின்றன. அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் அமியோ காரைத் தொடர்ந்து, செவர்லே பிராண்டில் புதிய காம்பேக்ட் செடான் காரை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. செவர்லே எசென்சியா என்ற பெயரில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய காம்பேக்ட் செடான் காரின் பிரத்யேக படங்கள், தகவல்களை இங்கே காணலாம்.

புதிய செவர்லே எசென்சியா

தற்போது விற்பனையில் இருக்கும் செவர்லே பீட் காரின் அடிப்படையிலான காம்பேக்ட் செடான காராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, முன்புறம், பக்கவாட்டில் பீட் காரின் சாயல் இருக்கிறது. பூட் ரூம் சேர்க்கப்பட்டு காம்பேக்ட் செடான் அவதாரத்தில் வந்துள்ளது.

செவர்லே பீட் ஹேட்ச்பேக் காரில் தற்போது பயன்படுத்தப்படும் 77 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 56 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் புதிய செவர்லே எசென்சியா காரிலும் பொருத்தப்படும். பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் மைலிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும். 5 பேர் பயணிகள் மற்றும் அவர்களது பொருட்களுடன் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

அடுத்த ஆண்டு இந்த புதிய காரை உற்பத்திக்கு கொண்டு செல்ல ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 6, 2016, 12:23 [IST]
English summary
Chevrolet has revealed the Essentia Concept compact sedan at the 2016 Auto Expo. The Essentia Concept is expected to make it into production in 2017.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X